❤ சிறுநகை 60

341 32 2
                                    

நாளை சந்தனாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக சஞ்சீவ், கல்பனா, ஜனார்த்தனன்
பிள்ளைகள் அனைவரும் இன்றே நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மினுவும் சஞ்சீவுடன் மிஸ்டர் ரேஷை பார்க்க வருவேன் என்று அடம்பிடித்து சஞ்சீவ் அவளுக்கு செய்த அட்வைஸ் மழையின் ஈரம் தாங்காமல் தன் அண்ணனிடம் தலைக்கு மேல் ஒரு கும்பிடாக போட்டு அவள் வேலையைப் பார்க்க போயிருந்தாள்.

இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து எல்லோரும் ஹாலிடே மூடில் சுற்றிக் கொண்டிருக்க சஞ்சீவ் மட்டும் கதிரை தனியே அழைத்துப் போய் சென்னை வீட்டை இந்த அக்கா எப்போது உங்களிடமிருந்து வாங்கி ரெஜிஸ்டரேஷன் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேளுங்கள் என்று கதிரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனுடைய முதுகை சுரண்டிக் கொண்டிருந்தான்.

"அடேய் இருடா.... இப்பத்தான் வந்து இறங்கி எங்க ஸாரப் பத்தி கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசிட்டு, பிள்ளைங்களோட சேந்து வீட்ட சுத்திப் பாத்துக்கிட்டு இருக்காங்க. வந்ததும் வராததுமா அவங்க கிட்ட போயி எப்டி இதெல்லாம் நான் பேச முடியும்? கொஞ்சம் டைம் குடு. அக்கா ஊருல இருந்து கெளம்புறதுக்குள்ள நான் அவங்க வீட்டுக்காரருட்ட மெதுவா இதப்பத்தி பேசுறேன்!" என்று சொன்ன கதிரிடம் முடியாதென தலையசைத்தவன் நேராக ஜனார்த்தனனிடம் போய் நின்று விட்டான்.

"மிஸ்டர் ஜனார்த்தன்! நைஸ் ட்டூ மீட் யூ! நான் மிஸ்டர் கதிரோட அஸிஸ்டெண்ட்; நீங்க அவரோட சென்னை வீட்ட வாங்கிக்கப் போறீங்கன்னு எங்கிட்ட சொன்னாரு! நான் ஏற்கனவே அவரோட பிஸினஸ் நடக்குற ஷாப்ஸையும் நல்ல அமௌண்ட் கெடச்சா கைமாத்தி விடணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்.ஸோ அவரோட சென்னை வீட்டுக்கு நீங்க எவ்ளோ குடுப்பீங்கன்னு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும்!" என்று பக்காவான பிஸினஸ்மேன் போல் என்ன
விலைக்கு வீட்டை வாங்கிக் கொள்ளப் போகிறாய் என்று
அடித்துக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவின் அருகில் பதட்டத்துடன் சென்று நின்றான் கதிரேசன்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now