❤ சிறுநகை 59

366 30 6
                                    

"எந்தா மோளே..... கதிர் வீட்டுக்குப் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்னு எங்கிட்ட சொல்லிட்டு போனீங்க? லன்ஞ்ச் டைம் முடிஞ்சு ஈவ்னிங் நாலு மணி ஆகிடுச்சு! இப்ப தான் வர்றீங்க? ரெண்டு பேரும் சேர்ந்து வேற எங்கயாவது போயிட்டு வர்றீங்களா மக்களே?" என்று கேட்ட ஆலெனிடம்,

"இல்ல டாட்! கதிர் வீட்ல தான் லன்ஞ்ச் சாப்ட்டு, அப்டியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றோம்!" என்றாள் சந்தனா.

ஜெபா வண்டியை வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு வராண்டா ஏரியாவில் அமர்ந்திருந்த
தன்னுடைய தந்தையின் அருகில் வந்து அமர்ந்தான்.

"ஆலென்.... அங்க நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் எல்லாம் நடந்துச்சு தெரியுமா....?உங்க பொண்ணுக்கு அந்த வீட்டுக்குப் போனா மட்டும் கோபமே வரமாட்டேங்குது. அந்த கிருஷ்ணராஜ் ரொம்ப மோசம் டாட்!" என்று சொன்னவனுடைய முகத்தைப் பார்த்த ஆலென் கேள்வியாக தன்னுடைய மகளைப் பார்த்தார்.

"எந்தானு ப்ரச்னம் மோளே?" என்று கேட்ட தந்தையிடம் அசட்டையாக உச்சுக்கொட்டிய சந்தனா,

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா! நம்ம வீட்ல நடக்குற மாதிரி தான் அங்கயும்! கையில இருக்கிற பணம் பத்தலன்னா ஒரு ட்ராமா நடக்கும்! என்ன நம்ம அம்மா இப்ப கொஞ்சம் அவங்கள பத்தி நம்ம
கம்ப்ளையிண்ட் பண்ணாத அளவுக்கு நடந்துக்குறாங்க; பட் கதிரோட அப்பா முதல்ல இருந்து இப்ப வரைக்கும் அவரோட இயல்ப மாத்திக்கவே மாட்டேங்குறாரு.....!" என்று சொன்னாள்.

"ஐயோ.... இதென்ன புது சிக்கலா இருக்கு? கதிரோட அப்பா இப்டி இருந்தா, நீ அங்க போயி எப்டி சந்து நிம்மதியான ஒரு வாழ்க்கைய வாழ முடியும்? உங்க அம்மா திரும்ப திரும்ப கதிரோட அப்பா அம்மாவ பத்தி தான் எங்கிட்ட பேசிட்டே இருந்தா மோளே! சந்துவுக்கு அவங்களோட செட் ஆகலையின்னா அவ நம்ம வீட்லயே இருந்துக்கலாம்ல ஆலென்னு எங்கிட்ட கேட்டுட்டு இருந்தா!" என்று சொன்ன தன்னுடைய தந்தையை கோபத்துடன் முறைத்தாள் சந்தனா.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now