❤ சிறுநகை 58

349 30 14
                                    

காலையில் சூரியகாந்தி மலர் போல் கண்களுக்கு விருந்தளித்தவள், மதிய வேளையில் நீலக்குவளை போல் கதிரின் கண்களுக்கு காட்சியளித்தாள். அவனது அன்னை ரேஷ் ட்ரெஸ்ஸஸில் இந்தக் காலத்தின் யுவதிகளுக்கு விருப்பமான உடை எதுவென அறிந்து கொண்டு, அவளுக்கென தேடி தேடி எடுத்து வந்த உடைகளில் தேர்ந்தெடுந்து ஒரு நீல நிற உடையை அணிந்திருந்தாள்.

வீட்டில் வளர்ந்து வந்த பிச்சிக்கொடிக்காக பாகேஸ்வரி
அமைத்திருந்த பந்தல் போன்ற அமைப்பின் அருகில் குளித்து முடித்து நின்று கொண்டிருந்தவள், அவளது இடைக்கு சற்று மேலே ஏறியிருந்த கூந்தலை துண்டால் துவட்டிக் கொண்டிருக்க, "இந்த துண்டுல உனக்கு என் வாசம் அடிக்குதா சூபொ?" என்று அவளிடம் கேட்க கதிருக்கு ஆசை தான்..... ஆனால் ஏதோ தவறு செய்து விட்டவன் போல் அவளது அருகில் கூட போகாமல் நூறு மீட்டர் தூரத்தில் நின்று அவளை கண்களால் மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்.

கட்டி அணைத்தது, கழுத்தோரம் கடித்தது, அவளது வாசத்தில் மயங்கி கிடந்தது, அவளது உடல் பாகங்கள் ஒன்று விடாமல் தன்னுடைய உடலால் அளந்தது என்று நினைத்த காதல் லீலைகளை எல்லாம் தங்குதடையின்றி செய்து விட்டு
அவளிடம் என் வாசத்தை நீயும் உணர்ந்தாயா? என் போல் நீயும் நம்முடைய தேகத்தீண்டல்களால் களித்தாயா என்ற கேள்விகளை இப்போது கேட்டால் அதற்குப்பிறகு நிகழப்போகும் விபரீதமான 
பின்விளைவுகளை நினைத்து ஒன்றும் பேசாமல் கமுக்கமாக பம்மிக் கொண்டு நின்று விட்டான்.

தன்னுடைய கையிலிருந்த ஸ்க்ரூ ட்ரைவரால் செடிகளுக்கு தண்ணீர் செலுத்தும் ஹோஸ்களில் இரண்டு மூன்று இடங்களில் குத்தி துளையிட்டவன், பைப்பை திறந்துவிட்டு, தான் போட்டு துளைகளின் வழியே பீய்ச்சி அடித்த தண்ணீரைப் பார்த்து,

"ஆங்.... வருது! வருது..... ஒரு ஆள் நனையுற அளவுக்கு நல்லாவே தண்ணி வருது!" என்று திருப்திப்பட்டுக் கொண்டான். எதற்காக நனைந்து போனோம் என்று அன்னையிடம் சொல்ல அவன் செய்யும் மெனக்கெடலைப் பார்த்து புன்னகைத்த சந்தனா அவள் கையிலிருந்த டவலை கீழே வீட்டின் பக்கவாட்டில் கட்டியிருந்த
கொடியில் காய வைத்து விட்டு
அவனருகில் வந்தாள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now