❤ சிறுநகை 57

Start from the beginning
                                    

இப்போதைக்கு போதுமான அளவு முத்தங்களும், அணைப்பும், தீண்டல்களும் நிறைவாக கிடைத்து விட்டதால் கதிர் அவளது இதழ்களை ஒருமுறை மென்மையாக சுவைத்து விட்டு அவளைப் பார்த்தான்.

"என்ன?" என்று கண்ணைச் சுருக்கி வினவியவளிடம்,

"என்ன சூபொ.... இவ்ளோ அமைதியா இருக்க? சத்தியமா நான் இதெல்லாம் ப்ளான் பண்ணி உன்னை இங்க கூட்டிட்டு வரல. இங்க வந்ததும் அதுவா ஒரு ப்ளோவுல தான்..... அதுவும் நீ என்னை ரொம்ப நிம்மதியாக்குற அளவுக்கு பேசுனதுக்கு அப்புறமாத்தான்..... இப்டியெல்லாம் யோசிக்க தோணிடுச்சு; நீ எதுவும் தப்பா எடுத்துக்கலையே? என் கண்ணப் பாத்து ஏதாவது பேசுடீ!" என்று அவளிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

"இந்த மூடுக்கு ஏத்த மாதிரி ஒரு கவித சொல்லேன் ரேஷன்?" என்று கேட்டவளிடம் வியப்பான குரலில்,

"ஆங்..... கவிதையா? இப்பயா?" என்றான் திருதிருவென விழித்த படி.

"ஏன்டா இப்டி முழிக்குற....? நீ ஒரு க்ரியேட்டர் தான? இந்த சிச்சுவேஷன்ல உனக்கு கவித எதுவும் வரலையா?" என்று கேட்டாள் சந்தனா.

அவள் கோபமாகவோ, வருத்தமாகவோ, குற்ற உணர்விலோ இல்லை என்ற நிம்மதியில் கதிர் புன்னகைத்த படி இரண்டு நிமிடங்கள் கண்மூடி யோசித்தான்.

"என் நிலவு நீ என்றும்
ஒரே அழகு தான்
சிலநேரங்களில்
என் மனநிலையை
பொறுத்து
உன் அழகு
கூடுதலாகவும்
குறைவாகவும்
பிரதிபலிக்கும்
மாறுபாடு நடந்து
விடுகிறது!
ஆக தவறு என்
மனநிலையின் மீது தான்!
தண்ணீருக்குள் கிடந்தாலும்
தீப்பற்றி எரிய வைக்கும்
உன் அழகின் மீதல்ல!"

என்று அவள் காதருகில் முணங்கியவனை கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தனா.

"கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. அதவிட நீ அத சொல்ற விதம் ஒருமாதிரி ரொமான்டிக்கா இருக்கு.
போதும்...... இங்கருந்து எழுந்திரிச்சு கீழ போய்டலாமாடா?" என்று கேட்டாள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now