❤ சிறுநகை 57

344 32 10
                                    

"டேய் தூங்கிட்டியா?" என்று கேட்டு அவனை உலுக்கினாள் சந்தனா.

"இல்ல; யோசிக்குறேன்!" என்றவன் அவளிடம்,

"லஷ்மி! ஒருவேள புதன்கிழம நாங்க எல்லாத்தையும் பேசுன பெறகு உங்கம்மா நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லலையின்னா நீ என்ன முடிவெடுக்கப் போற?" என்று கேட்டான். அவனது முகம் பெரிதாக சிந்தனை வயப்பட்டிருந்தது. குரலும் அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

அவன் அவ்வளவு தீவிரமான முகபாவத்தில் இருப்பது சந்தனாவிற்குப் பிடிக்கவில்லை. அவனை கொஞ்சம் இதமான மனநிலைக்கு கொண்டு வர வேண்டுமென நினைத்தவள், தொட்டியில் கிடந்த
தண்ணீரை ஒரு கையில் அள்ளி அவன் முகத்தில் தெளித்தாள்.

"ம்ப்ச்! என்ன வெளையாட்டு இது?" என்று கேட்டு முகத்தில் இருந்த தண்ணீரை வழித்து எறிந்தவனிடம்,

"விளையாட தான இங்க வந்துருக்கோம்னு சொன்ன? அப்புறம் என்ன?" என்று கேட்டவள்,

"கண்ண தெறந்து என்னைப் பாரு ரேஷன்!" என்றாள் அவன் முகத்தைப் பார்த்த படி.

"சொல்றத அப்டியே சொல்லு! எனக்கு காது கேக்குது; என்ன பண்ணப்போற?" என்று கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் தராமல் எதையோ தீவிரமாக யோசிப்பது போன்ற பாவத்தில் அமர்ந்திருந்து கலங்கியிருந்த கதிரின் மனதை இன்னும் கொஞ்சம் கலங்கடித்தாள் அந்த பாதகத்தி.

அவளிடமிருந்து பதில் வருமென கண்களை மூடி இரண்டு மூன்று நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தவனுக்கு இப்போது பொறுமை பறந்தது. கண்களைத் திறந்தவன் அவளிடம்,

"ஏ.....ஒரு கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்றதுக்கு இவ்ளோ நேரமாடீ ஒனக்கு?" என்று கேட்டு கோபப்பட்டான்.

"ம்ப்ச்! ஏன் இப்டி கத்துற? நீங்க வந்து பேசுனதும், அம்மா நம்ம விஷயத்துல ஓகே சொல்லலயின்னா நீ வாங்கி வச்ச மோதிரத்தயே எனக்கு வெட்டிங் ரிங்கா போட்டுடு. அப்டியே என்னை இங்க கூட்டிட்டு வந்துடு! மிஸஸ் சுமலதா அவங்களோட பொண்ணுக்கு மைசூர்ல தசரா பங்ஷன் நடக்குற மாதிரி நாள் கணக்குல கல்யாண ஏற்பாடு செய்யணும்னு கனவு கண்டுட்டு இருந்தாங்க...... ஆனா அது யார் கூடங்குற ஒரு கேள்வி இருக்குதுல்ல? ஸ்டேட்டஸ பாத்து அவங்க உன்னை வேண்டாம்னு சொன்னாங்கன்னா, அவங்களோட பொண்ணும் வீட்ட உட்டு ஓடி வந்து தான் அவளோட ஆள கல்யாணம் பண்ணிக்கணும்; இந்த விஷயத்துல வேற முடிவுக்கே இடமில்ல!" என்று சொன்னவளை சட்டென கீழே தள்ளி அவள் மேலே படர்ந்திருந்தான் கதிரேசன்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now