❤ சிறுநகை 55

324 31 4
                                    

"எங்கிட்ட இவ கேட்ட மாதிரி ஏஸி, பாத்ரூமோட ட்ரெஸ்ஸிங் ரூம் அட்டாச்டுனு எந்த ரூம்ல எல்லா வசதியையும் செஞ்சு வச்சனோ அந்த ரூம தேடிக் கண்டுபிடிச்சு கரெக்டா உள்ள போயிக்கிட்டு நம்மள நேக்கா கழட்டி உட்டுடுச்சு பாருய்யா இது..... அவ லிப்லாக் குடுக்குறேன்னு சொன்னா அத நம்பி அவள எறக்கி விட்ட ஒனக்கு எங்கடா போச்சு அறிவு? கீழ எறக்கி விட்ட நிமிசத்துல உள்ள போயி கதவ சாத்திக்கிட்டாளே?" என்று முணங்கியவன்,

"ஏய்! லஷ்மி.... நேத்து நைட் இந்த ரூமுக்குள்ள ஒரு சுண்டெலி ஓடுறதப் பாத்தேன்டீ! அது இன்னும் உள்ளுக்குள்ள தான் எங்கயாவது சுத்திட்டு இருக்கும்! பயமா இருந்ததுன்னா வெளிய வந்துடு!" என்று அறையின் கதவருகில் காதை வைத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"என்னது? எலியா.....? டேய் திமிங்கலமே எலிய எதுக்குடா இந்த ரூமுக்குள்ள வச்சு வளத்துக்கிட்டு இருக்க?" என்று அவனிடம் கேட்டபடி துள்ளிக் குதித்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிடுவாள் என்பது அவனுடைய எதிர்பார்ப்பு!

அவளோ சாதாரணமான குரலில் அவனிடம், "நோ ப்ராப்ளம்! ஒனக்கு குடுக்குறேன்னு சொன்ன லிப் கிஸ்ஸ நான் அதுக்கு குடுத்துக்குறேன். நீ உன் ரூமுக்குப் போ!" என்று உள்ளிருந்தே பதில் கொடுத்தாள்.

"அது சரி.... டேய் கதிரு! எலிக்கெல்லாம் பயந்து தவ்விக் குதிக்குறதுக்கு அவ என்ன இன்னும் பதினாலு வயசு பாப்பாவா? இருந்தாலும் என்ன தெனாவெட்டா அதக் கட்டிப் புடிச்சு முத்தம் குடுக்குறேன்னு சொல்லுது பாரு என் செல்ல சூபொ! இருடீ..... உன்னைய வெளிய வர வைக்குறதுக்கு வேற ஒரு வழிய கண்டுபிடிக்குறேன்!" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்த கதிர் சில நிமிடங்கள் யோசித்துக் கொண்டிருந்து விட்டு ஒரு மர்ம புன்னகையுடன் மாடியிலிருந்து கீழே வரை போடப்பட்டிருந்த staircase railing மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

மாடியில் அவனறைக்கு எதிர்புறத்தில் அமைந்திருந்த அவளது அறையின் உள்ளே கட்டில், ஸோஃபா எல்லாவற்றையும் வாங்கிப் போட்டது போதாது போலிருக்கிறதே....? இவள் கோபப்பட்டு தன்னை வெளியே தள்ளி கதவைச் சாற்றும் நேரங்களில் தான் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திலும் ஒரு கம்பர்டபிளான ஸீட்டரையும் வாங்கிப் போட வேண்டுமே என்று யோசித்தவன் அதை அப்புறமாக யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தன்னுடைய அலைபேசியில் ஒரு பாடலை சப்தம் அதிகமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now