❤ சிறுநகை 53

Start from the beginning
                                    

"வாங்க வாங்க...... தம்பியும், பாப்பாவும் வந்துருக்குறீங்களா? அதுனால தான் எங்கூட நின்னுகிட்டு துணிய காய வச்சுக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டானாக்கும்? ஒக்காருங்க ரெண்டு பேரும்..... என்ன சாப்புடுறீங்க? சில்லுன்னு ஜுஸ் போட்டு கொண்டாரவா?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம் அதிகாரமான குரலில்,

"ஏன்டீ.... இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு தெரியாம அதுக ரெண்டையும் குசலம் வெசாரிச்சுட்டு இருக்க? மரியாத தெரியாத பக்கிங்க..... அதுங்கள
வெளிய பத்தி கதவ சாத்து மொதல்ல..... இல்லன்னா என்னைய மதிக்காதவிங்களுக்கு மரியாத குடுத்த ஒங்கன்னம் தான் பிஞ்சிரும் பாத்துக்க!" என்று சொல்லி தன் மனைவியை
அறைவதற்காக கையை ஓங்கிக் கொண்டு சென்றார் கிருஷ்ணராஜ்.

"எங்கம்மா மேல உன் சுண்டுவிரல வச்சன்னா கூட அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல போயி கம்பி எண்ணிட்டு வர வேண்டியதிருக்கும்! அதுக்கு ரெடியா இருந்தன்னா மேற்கொண்டு ஏதாவது செய்யி பாப்போம்!" என்று தன் தந்தையிடம் உரத்த குரலில் சொன்னான் கதிரேசன்.

"என்னடீ..... ஒம்மவன் என்ன போலீஸுல பிடிச்சுக் குடுத்துருவேன்னு சொல்லி பூச்சாண்டி காட்டுறானா? ஆத்தாளும், மவனும் சேந்துகிட்டு என்னைய இளிச்சவாயனாக்கணும்னு நெனச்சீங்களா? எனக்கு
எதுவும் தெரியாதுன்னு நெனைக்காத! இந்த வீட்ல போட்ருக்குற பேர மாதிரியே இந்த ஊருக்குள்ள அஞ்சாறு கடையில இவம்பேரு போட்ருக்கு! நமக்கு சொல்லாம ஒரு நகைக்கடயவே சொந்தமா வாங்கி வச்சுருக்கான்டீ ஒம்புள்ள...... இத்தன நாளா எனக்கு வேலன்னு நெனச்ச? இதெல்லாம் தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சதுதா; அதுக்கு மேல இவன் என்ன கோளாறு பண்ணி வச்சிருக்காங்குற? கட இவனுது தானாம்; ஆனா மொத்த வரவு செலவு, சம்பளப் பட்டுவாடா இதையெல்லாம் பாக்குறது இவங்கூடவே சுத்திக்கிட்டு திரிவானுல்ல சஞ்சீவுன்னு ஒருத்தன்..... அவந்தானாம்! இதெல்லாம் எத்தன பேர கவனிக்குற மாதிரி கவனிச்சு அவிங்கட்ட எம்புட்டு காச குடுத்து விசாரிச்ச விஷயங்குற......?"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now