❤ சிறுநகை 53

388 32 5
                                    

"சேகர்..... உங்க அக்கா பக்கத்துல இருந்து கொஞ்சமா தள்ளி நில்லுடா!" என்று சொன்ன கதிர் தன்னுடைய கையிலிருந்த தீப்பெட்டியில் இருந்து ஒரு தீக்குச்சை பற்ற வைத்திருந்தான்.

"வந்தாள் மை லஷ்மியே....
என் வீட்டில் என்றும்
அவள் ஆட்சியே....
அடியேனின் குடி வாழ
தனம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மை லஷ்மியே!"

என்று பாடியவன் ஜெபாவின் சிரிப்பையும்,  சந்தனாவின் முறைப்பையும் பொருட்படுத்தாமல்
தீக்குச்சியை ஆரத்தி சுற்றுவது போல அவள் முகத்திற்கெதிராக மூன்று முறை சுற்றி ஊதி விட்டு,

"வெத்தலபாக்கெல்லாம் வெளியாளுங்களுக்கு தான்;
நீ மருமகளா இந்த வீட்டுக்குள்ள நுழையும் போது எங்கம்மா மொறயா உனக்கு ஆரத்தி எடுப்பாங்க. அதுவரைக்கும் இத உனக்கு எடுத்த டெம்பரவரி ஆரத்தியா நெனச்சுக்க; உள்ள வா லஷ்மி! சேகர் நீயுந்தான் உள்ள வாப்பா!" என்று சொல்லி அவளுடைய கைப்பற்றி அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

"எலேய் நில்றா! நான் இவள வீட்டுக்குள்ள வரவேணாம்; வெளிய போன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுல இவ கையப் புடிச்சு உள்ளார கூட்டிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்ட கிருஷ்ணராஜிடம்,

"அதுவா அங்கிள்? கதிர்ணா உங்க பேச்ச கொஞ்சங்கூட மதிக்கலன்னு அர்த்தம்! உங்க பேச்ச மட்டுந்தான் மதிக்க மாட்டேங்குறாரா இல்ல உங்களையும் மதிக்கலையான்னு நான் உங்க கிட்ட கேள்வி கூட
கேக்கலாம்..... ஆனா பயப்படாதீங்க; அப்டியெல்லாம் எந்தக் கேள்வியும் கேக்க மாட்டேன். உங்க கேள்விக்கு பதில் சொல்றது மட்டுந்தான் என்னோட வேல!" என்று மிகவும் பதவிசான குரலில் கிண்டலைக் கலந்து கிருஷ்ணராஜிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜெபசேகரன்.

"ஜெபா.... வாய மூடு! எதுவும் பேசாத!" என்று சந்தனா ஜெபாவிடம் கொண்டிருக்க அப்போது தான் மொட்டைமாடியில் துணிகளை துவைத்து காய வைத்து விட்டு படிகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார் பாகேஸ்வரி.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now