❤ சிறுநகை 52

Start from the beginning
                                    

பாகேஸ்வரியிடம் சந்தனாவின் அளவுக்கு முதலாளி மிடுக்கு வரவில்லையே தவிர, அவரும் மகனுடைய இந்தக் கடையை திறமையாக, லாபம் ஈட்டும் வகையில் நடத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்க சந்தனாவிற்கு அவளுடைய வேலை எளிதாகிப் போனது.

"பாப்பா! நான் மட்டுமா மொதலாளி கல்லாவுல ஒக்கார என்னமோ மாதிரியிருக்கு கண்ணு! அப்டியே கதிரோட அப்பாவையும் இங்கணக்குள்ள ஒரு சேரப் போட்டு ஒக்கார வச்சுக்கிட்டு நீ சொல்றாப்புல்ல வியாபாரம் பண்ணட்டா தங்கம்?" என்று கேட்டவரிடம்,

"அந்த முடிவ நான் எடுக்க முடியாது ஆன்ட்டி! நீங்க இதப்பத்தி கதிர்ட்ட பேசிக்கோங்க!" என்று சொல்லி பேச்சை முடித்து விட்டாள்.

தன்னுடைய மடியில் படுத்திருந்த
மகனிடமும் ஒருமுறை பாகேஸ்வரி இதுபற்றிப் பேசிப் பார்க்க அவன் பதிலே பேசாமல் பாகேஸ்வரியின் மடியிலிருந்து எழுந்து சென்று விட்டான்.

கிருஷ்ணராஜூம் பெரிய அளவில் ஒன்றும் தொந்தரவு எதுவும் கொடுக்காமல் அவரது தனிப்பட்ட உலகத்தில் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது தன்னுடைய தந்தையின் முகத்தில் தெரிந்த அளவிடும் பார்வையும், அவரது அமைதியும் கதிரை கொஞ்சம் பயமுறுத்தித் தான் பார்த்தன.

ஒற்றை ஆளாக இருந்த போது அந்த வீட்டில் மிகவும் சுதந்திரமாக உலவியவன், தன்னுடைய தந்தை இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து தன்னுடைய நடமாட்டத்தை பெரிதும் குறைத்துக் கொண்டான். இருவரும் ஹாலில் உட்கார்ந்திருந்து தொலைக்காட்சியில் படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் அவரது விருப்பத்திற்கு தான் முதல் மரியாதை! தங்கும் அறையில் இருந்து, அவருக்கான தேவைகள் அனைத்தும் அவர் சொடுக்கிடும் நேரத்திற்குள் அவருக்கு கிடைக்கும்படி பாகேஸ்வரி பார்த்துக் கொண்டார். அவருடைய இத்தனை ப்ரயத்தனங்களும் தன்னுடைய பிள்ளைக்கு கணவரால் எதுவும் இடைஞ்சல் வந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுந்தான்!

கதிருடைய நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. வீட்டில் தாய், தந்தையை வைத்துக் கொண்டு அவனுடைய காதலியை அவனால் இங்கு வரவைக்க முடியவில்லை. அவள் வீட்டுக்காவது செல்லலாம் என்று பார்த்தால் அவன் எப்போது அங்கு போனாலும் சுமலதா சந்தனாவை சீக்கிரமாக குடும்பத்துடன் பெண் பார்க்க வரும்படி கதிரிடம் கேட்டு அவனை நச்சரித்துக் கொண்டிருந்தார்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now