❤ சிறுநகை 51

344 31 6
                                    

அன்று காலையில் தன்னுடைய கடைக்கு வந்த குணாளினி தான் வழக்கமாக வண்டியை பார்க் செய்யும் இடத்தில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டிருந்த எண்ஃபீல்டை பார்த்து "வந்துட்டான்டா காலங்காத்தால நம்ம உசுர பிய்ச்சு திங்குறதுக்கு....!" என்று நினைத்து
எரிச்சலடைந்த படி தனது வண்டியை அவனுடைய வண்டியின் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு தன்னுடைய கடைக்குள் நுழைந்தாள்.

"மிஸஸ். சுந்தரவடிவு! நாம ஒண்ணும் இங்க லைப்ரரி நடத்தல. ஸோ இத்தன சேர்ஸ் இங்க அவசியமில்ல! மூணே மூணு பேர் மட்டும் உட்காருற ஒரு த்ரீ ஸீட்டர மட்டும் கடைக்குள்ள வச்சுட்டு, மத்த ரெண்டையும் வெளிய எடுங்க! நிறைய கஸ்டமர்ஸே வந்தாலும், அவங்க காரிடார் ஏரியாவுல வெயிட் பண்ற மாதிரி செட்டப்ப மாத்துங்க. ஒரு கஸ்டமர குணாளினி அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கும் போது, அடுத்தவங்க உள்ள வரக்கூடாது.... அண்ட் உங்களோட எல்லா டிஸைன்ஸையும் இப்டி ஷோ பீஸா வைக்கக்கூடாது......"

"டிஸைனிங் தெரிஞ்சவங்களும் இங்க வர்றதுக்கு அதிகமா வாய்ப்புகள் இருக்கு; ஸோ நம்மளோட சிக்னேச்சர் டிஸைன்ஸ் முதக்கொண்டு எல்லாத்தையும் நாம டிஸ்ப்ளேல வச்சா, அவங்க அத ஈஸியா காப்பி பண்றதுக்கு நாமளே ஒரு ரூட் போட்டுக் குடுத்த மாதிரி இருக்கும்! ஆம் ஐ ரைட்?" என்று கேட்டவனை வியந்து பார்த்த சுந்தரவடிவு அந்த ரோலிங் சேரில் அவன் அமர்ந்திருந்த தோரணையை பார்த்தும் வியந்தார். சுவரில் சாய்ந்து
கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் குணாளினி.

"அய்ய... என் ராசா....! எங்க குணாப்புள்ளக்கெல்லாம் மாங்கு மாங்குன்னு வேல செய்யத் தெரியுமே ஒழிஞ்சு அது இப்டியெல்லாம் கூறுவாறா ஒரு யோசன கூட சொல்லாதுங்க தம்பி;
எங்ககிட்ட துணியக் குடுத்த மாப்பிள்ள பயலுக வந்து நல்லாருக்குதுங்கக்கா; கோட்டு தைச்சது எனக்கு பிடிச்சுருக்குதுங்கன்னு சொல்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் நகத்த கடிச்சிக்கிட்டு ஒக்காந்துருப்போம்! இப்ப நீங்க இங்க வந்து இத்தன யோசன சொல்றதால இந்தப்புள்ளையோட கட எங்கயோ போயிடப்போவுது பாருங்க! மொத வேலையா நம்ம
சூட்டு கோட்டையெல்லாம் யாரும் பாக்க முடியாத அளவுக்கு ஒரு இரும்பு பீரோவ வாங்கி அதுக்குள்ளார வச்சி பத்திரமா பூட்டி வக்கணுமுங்க! நீங்க
ஏதாவது சாப்டுறீங்களா? சூடா ரெண்டு இட்லி வட?" என்று கேட்டார் சுந்தரவடிவு.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now