❤ சிறுநகை 50

370 29 3
                                    

குணாளினியும், சஞ்சீவும் சாப்பிட்டு முடிக்கும் வரை வினோதினி, சஞ்சீவின் சித்தப்பா, சித்தி, மினு, வசந்தன் இவர்கள் அனைவரும் லானில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பத்து நிமிடத்தில் பெயருக்கு சாப்பிட்டு எழுந்து விடலாம் என்று நினைத்தவளை அப்படி சட்டென்று எழுந்திரிக்க விடாமல் அவளுக்கு அங்கிருந்த நிறைய பதார்த்தங்களில் எது எது வேண்டும், எது எது பிடிக்கும் என்று ஒவ்வொன்றையும் கேட்டு அதை அவளுடைய இலையில் பரிமாறிக் கொண்டிருந்தான் புதிதாய் பிறந்த அந்தக் காதலன்.

"சட்டுப்புட்டுன்னு சாப்ட்டு என்னைய எந்திரிக்க உடுடா!" என்று சொல்லி பல்லைக் கடித்தவளிடம்,

"சட்டுபுட்டுன்னு சாப்ட்டுட்டு நீ எங்க போகப்போற டிம்பிள்....? வீட்டுக்குத்தான? அங்க மெதுவா போய்க்கலாம் விடு! உனக்கு சாப்பாட்டுல எது எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்? எது எதெல்லாம் தொட்டே பாக்காம அவாய்ட் பண்ணுவன்னு எனக்குத் தெரிய வேண்டாமா? உன்னைப் பத்தி ஒண்ணுமே தெரியாம இந்தப் பொண்ண நான் லவ் பண்றேன்னு சொன்னா கேக்குறவங்க சிரிக்க மாட்டாங்களா?" என்று கேட்டவனுக்கு பதிலாக கிடைத்த அவளுடைய கண்களின் உருட்டல் சிரிப்பைத் தான் தந்தது.

ஒருவழியாக டைனிங் டேபிளில்
அவன் கொடுத்த இம்சைகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து வந்தவள், அவளுடைய தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஆறு பேருக்கு தான் அங்கு இருக்கை வசதி போடப்பட்டிருக்க சஞ்சீவ் குணாளினியை ஒருமாதிரியாக முறைத்துக் கொண்டே சென்று சேருக்கு சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

"பெரிமா! சஞ்சு அண்ணா ஊஞ்சல்ல ஒக்காந்து அண்ணிய மொறைச்சு பாத்துட்டு ஒக்காந்துருக்கான்!" என்று வினோதினியின் காதைக் கடித்தாள் மினு.

"உங்கண்ணி அவன் பக்கத்துல  உட்காரலன்னு நினைச்சு ஃபீல் பண்றானோ என்னவோடா? இரு முதல்ல அண்ணியோட அப்பா கிட்ட பேசுவோம்!" என்று சொன்ன வினோதினி தன்னுடைய கொழுந்தனாரின் முகத்தைப் பார்த்தார். அவரும் வினோதினியிடம் பேசுங்கள் என்பது போல கண்ணசைக்க வசந்தனிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now