❤ சிறுநகை 48

Start from the beginning
                                    

பொன்னுரங்கம் என்ற பெரிய மனிதர் தனது மகளின் விருப்ப படிப்புக்கான காலேஜ் சேர்க்கை, படிப்பு முடியும் வரை அவளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அக்கறையாக எப்படி படிக்கிறாள் என விசாரித்தது, அவள் விரும்பிய இடத்திலேயே அவளுக்கான தொழிலை ஏற்படுத்திக் கொடுத்தது இவை எல்லாம் இந்த இயல்பில் இருக்கும் தனது பேரனுடைய மணவாழ்வுக்கான முன்னேற்பாடுகள் தானோ என்று அவருக்கு தோன்றியது.

"ஏனுங்க தம்பி..... உங்க பேச்சுல இருந்தே உங்களுக்கு சொந்த பந்தமெல்லாம் பிடிக்காதாட்டம் தெரியுதுங்க; உங்க தாத்தா சாவுக்கு கூட வந்து நிக்கலைங்களே நீங்க? எங்க குடும்பத்துக்கு நெறய ஒத்தாச பண்ணியிருக்கீங்க தான்னாலும், நீங்க இந்த போக்குல இருந்தா உங்கள நம்பி எப்டி எம்புள்ளய உங்களுக்கு கல்யாணம் பண்ணி வக்கிறதுங்க?" என்று கேட்டவரிடம் ஒருநிமிட யோசனைக்குப் பின் தோளைக் குலுக்கியவன்,

"இட்ஸ் அப் ட்டூ யுவர் டெஸிஷன்! நான் யாரையும் எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ணல!" என்று சொல்லி விட்டு அவன் பாட்டில் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

தன்னுடைய அறைக்குள் சென்று பாராமல்ஸை மாற்றி விட்டு இலகுவான ஸ்வீல்லெஸ், த்ரீ போர்த்துக்கு மாறியவன் குணாளினியின் அப்பாவிடம் தான் அப்படி பேசியிருக்க கூடாதோ என்ற யோசனையுடனே வெகுநேரம் கட்டிலில் அமர்ந்த நிலையில் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவன் அறைக்குள் வந்து இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும்! அவ்வளவு நேரத்திற்கு பின் அவனது அறையின் கதவு லேசாக தட்டப்பட்டது.

"கம் இன்.....!" என்று சப்தமாக சொன்னவனுடைய அறைக்கதவை திறந்து கொண்டு தன் இடையில் ஒருகையை வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் குணாளினி.

"ஹாய்..... என்ன இந்த பக்கம்?" என்று கேட்டு புன்னகைத்தவனிடம்,

"ஆங்......! ஷேவ் பண்றதுக்கு ப்ளேடு கெடைக்குமான்னு உங்ககிட்ட கேட்டுட்டு போகலாமுன்னு வந்தேனுங்க!" என்றாள். அவளது குரலில் கிண்டலை விட கோபம் தான் அதிகமாக நிறைந்திருந்தது.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now