❤ சிறுநகை 48

320 26 3
                                    

தன்னுடைய வீட்டிற்குள் மெயின் கேட்டின் வழியாக நுழையாமல் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பயன்படுத்தாத இரண்டாவது கேட்டின் முன் தனது பைக்கை நிறுத்திய சஞ்சீவ் சென்ஸார் மூலம் திறந்த கதவுகளின் உதவியால் வீட்டின் காம்பவுண்டிற்குள் நுழைந்து தன்னுடைய பைக்கை ஷெட்டில் பார்க் செய்து விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

நடைபாதையில் அவனைப் பார்த்து புன்னகைத்த ஒரு நடுத்தர வயது மனிதர் அவனிடம்,

"தம்பி வணக்கமுங்க! நா குணாப்புள்ளயோட அப்பாரு! என் பேரு வசந்தனுங்க!" என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

"ஹலோ மிஸ்டர் வசந்தன்! நைஸ் ட்டூ மீட் யூ! நானே உங்கள பாக்க வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன்; நீங்க அதுக்குள்ள நம்ம வீட்டுக்கே வந்துட்டதால இப்ப மீட் பண்ணியாச்சு! ஏதாவது சாப்டீங்களா?" என்று அவரிடம் இயல்பாக கேட்டவனின் பேச்சில் ஒரேடியாக திகைத்துப் போய் என்ன பேசுவதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் வசந்தன்.

இந்த இளைஞனுக்கும், தன்னுடைய பெண்ணுக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை தான்.....! ஆனாலும் "வாங்க! ஊருல எல்லாரும் சவுக்கியமுங்களா....?" இப்படிப்பட்ட பேச்சு தான் தனது வருங்கால மாப்பிள்ளை பையனிடமிருந்து வருமென எதிர்பார்த்திருந்தார் வசந்தன்.

அவன் அவரது எதிர்பார்ப்புக்கு கொஞ்சங்கூட சம்பந்தமேயில்லாத ஒருவிதமான வரவேற்பை தரவும் திகைத்து திணறி விட்டார்.

"கொஞ்ச நேரம் முன்னால தானுங்க இங்க வந்தோம்; அப்புறமா சாப்ட்டு கெளம்புனா போச்சுங்க..... நீங்க என்னிய மாமாண்டு கூப்புட பிரியப்படலையின்னா நீங்க, வாங்கன்னே பேசுங்க தம்பி! அதுக்காக எம்பேரச் சொல்லியெல்லாம் மிஸ்டரு போட்டு கூப்டாதீங்கங்க.....!" என்று சஞ்சீவிடம் சொன்னார்.

"ஸாரி! எனக்கு யாரையும் அவங்களோட ரிலேஷன்ஷிப்ப சொல்லி கூப்டுறதுக்கு பிடிக்காது! என்னோட இந்த ஹேபிட்ட நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்புறேன்!" என்று சொன்ன சஞ்சீவை ஒருமாதிரியாக பாவமாக பார்த்தார் வசந்தன்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now