❤ சிறுநகை 47

330 29 4
                                    

"ஏ காலா சச்சுமா! ஏ காலா சச்சுமா!" என்று பாடி தன் வீட்டு ஹோம் தியேட்டரில் ஸீட்டில் அமர்ந்து அந்த அறையில் இருந்த 85 இன்ஞ்ச் டீவி திரையில் சமீபத்திய சித்தார்த் மல்ஹோத்ரா, கேத்ரீனாவின் பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் மினு.

ஸீட்டிலேயே அமர்ந்திருந்த படி எகிறி எகிறி குதித்து அவள் ஆடிய ஆட்டமும், அந்த இருட்டான அறையும் வினோதினிக்கு அவர் செய்து கொண்டிருந்த வேலைக்கு தடையாக இருந்தது என்றாலும் ஒருவாறாக சமாளித்து அதை செய்து கொண்டிருந்தார்.

"கொஞ்சம் சத்தத்த கம்மி பண்ணு மினு..... சவுண்ட் அலறுதுடா!" என்று அவளிடம் கெஞ்சிய வினோதினியிடம்,

"ம்ப்ச் போங்க பெரிமா! நல்ல ரிதம் இருக்குற பாட்டெல்லாம் இப்டிதான் ஹை வால்யூம்ல கேக்கணும்!" என்று சொன்ன படி அவளுடைய பாடப் புத்தகங்களின் மேல் வைத்திருந்த பாப்கார்ன் பவுலில் இருந்து வாய்நிறைய பாப்கார்னை அடைத்துக் கொண்டாள்.

"ஏன் மினு! அண்ணா உங்கிட்ட அந்தப் பொண்ண பத்தி ஏதாவது விசாரிச்சானாடா?" என்று கேட்ட படி மினுவின் நகத்தை வெட்டி ஷேப் செய்து ஓவல் வடிவத்தில் சரியாக மாற்றிக் கொண்டிருந்தார்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், இப்படி பெரியன்னையும், அவளுமாக தோட்டத்தில் உள்ள கல் பெஞ்சில், இல்லையென்றால் மாடியில் இருக்கும் சிட் அவுட்டில் இல்லை இன்று வந்தது போல் வீட்டினருடைய பயன்பாட்டுக்கான 8 ஸீட்டர் ஹோம் தியேட்டரில் பாப்கார்னுடன் என்று எங்காவது அவர்களுடைய சவுகரியமான இடத்தில் செட்டில் ஆகி விடுவது அவர்களுடைய வழக்கம்!

மினுவிற்கு தன்னுடைய அன்னையிடம் கிடைக்காத சலுகை தன் பெரிய அன்னையிடம் கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சி! வினோதினிக்கு பிஸினஸை ஓரங்கட்டி விட்டு வீட்டிற்கு வந்தால் அவரோடு சற்று நேரம் இப்படி குழந்தைத்தனமாக விளையாட இந்த வாலுப்பெண் இருக்கிறாள் என்ற மகிழ்ச்சி!

".......ஆ! பெரிமா பாத்து என் நைல்ஸ ஷேப் பண்ணுங்க! நகத்த தோலோட வெட்டுறீங்க!" என்று புகார் படித்தவளிடம் கறார்க் குரலில்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now