❤ சிறுநகை 44

335 31 7
                                    

பாகேஸ்வரியும், கிருஷ்ணராஜும் மூட்டை முடிச்சுகளுடன் சென்னையிலிருந்து கிளம்பி நாகர்கோவிலுக்கு வந்தடைந்து கதிருடைய வீட்டில் செட்டிலாகி நான்கு நாட்களாகி இருந்தன.

அவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் உதவியோடு நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து சேர்ப்பதையும் சந்தனாவும், ஜெபாவும் பார்த்துக் கொண்டனர்.

சந்தனா அவளுடைய சூப்பர்மார்க்கெட் மேலாளர் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல், சில பல வேலைகள் இருந்த நேரம் தவிர மற்ற நேரத்தில் தன் வீட்டில் ஜாலியாக அன்னையுடன் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள்.

சந்தனாவின் ஓய்வு அவளுக்கு சுகத்தை கொடுத்ததோ இல்லையோ, அவளது காதலனுக்கு பற்றி எரியும் வயிற்றுக்கடுப்பை கொடுத்தது. தினம் ஒரு வேலை என்று தான் ஓடிக் கொண்டிருக்க, இவள் மட்டும் என்ன வீட்டிலேயே உல்லாசமாக அமர்ந்திருப்பது என்று குமைச்சல் அடைந்தான். அவளிடம் பேசும் போது கூட,

"ஏய் சூபொ.... கடைங்க எல்லாத்துலயும் நம்ம பாக்குறதுக்கு எத்தன வேல வரிசை கட்டி நிக்குது? நீ என்னடீ அதெல்லாம் உட்டுட்டு அந்த ஹீரோயினம்மா பக்கத்துல உக்காந்து முந்திரிப்பருப்ப சாப்ட்டுட்டு இருக்க? சஞ்சீவ் என்கிட்ட பெயிண்டிங்க் கேட்டுருக்கான்டீ! எனக்கு எல்லா வேலையிலயும் கொஞ்சம் கூடமாட நின்னு ஹெல்பாவது பண்ணலாம்ல?" என்று கோபமாக கேள்வி தான் கேட்டான்.

"அடடேய்; என் பாசக்கார பட்டரு..... நான் சும்மாயிருந்து வீட்ல முந்திரிப்பருப்பு சாப்ட்டேன்; அத நீ பாத்த! இளமதியும், வெண்மதியும் பாகேஸ் ஆன்ட்டிய ஊருக்கு கிளம்ப விட மாட்டோம்னு சொல்லி ஒரே அழுகை அழறாங்கடா; நான் டெய்லி அவங்க ரெண்டு பேர்ட்டயும் கால் பண்ணி பேசி இங்க கதிர் மாமா பாவம்ல செல்லங்களா..... பாட்டி இல்லாம அவங்க தனியா இருக்காங்கல்ல; அதான் பாட்டி இங்க மாமா வீட்டுக்கு வரப்போறாங்கன்னு சொல்லி அந்த நிலாங்க ரெண்டையும் சமாதானம் பண்ணியிருக்கேன்!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now