❤ சிறுநகை 43

Start from the beginning
                                    

"மிஸ்டர் கதிர்..... உங்களுக்குப் பிடிச்சத வாங்கிட்டு வந்தது உங்க மேல இருக்கற பாசத்துனாலயுமில்ல; நேசத்துனாலயுமில்ல.....! உங்களோட நெக்ஸ்ட் ஆர்ட் வொர்க்குக்காக நான் உங்களுக்கு தர்ற லஞ்சம்! நான் போனதுல இருந்து கேலரிய நீங்க யூஸ் பண்ணவே இல்ல போலிருக்கே? அடுத்த ஒரு மாசத்துக்குள்ள ஒரு மெச்சூர்டான தீம்ல ஒரு பெயிண்டிங்க ரெடி பண்ணி வக்குறீங்க, புரியுதா? பின்னாடியே வெரட்டிட்டு வர்றதுக்கு ஒரு ஆளில்லன்னா அப்டியே ஒக்காந்த இடத்துலயே செளகர்யமா படுத்து தூங்குறது!" என்று திட்டு, கட்டளை, பணி குறித்த அறிவிப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பேச்சில் கதிரிடம் அறிவித்தான் சஞ்சீவ்.

"பாசமில்ல, நேசமில்லன்னு நீ சும்மா வாயால சொன்னாலும், உனக்கு உள்ளுக்குள்ள இருக்குற பாசத்த மூடி வைக்க தெரியலடா! உன்னையறியாமயே நீ அத எங்கிட்ட காட்டிடுற! நீ கேட்ட மாதிரியே நான் அடுத்த பெயிண்டிங்குக்கு வேல பாக்க ஆரம்பிக்குறேன்! அதுனால அண்ணன திட்டாத தங்கம்! நீ ஆசப்படுற மாதிரி உனக்கு உன்னோட சைஸ்ல ரெண்டு செட் ட்ரெஸ் புதுசாவே வாங்கிட்டு வந்துட்டேன்; கலர் பிடிக்கல, டிஸைன் பிடிக்கலன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இத மறுபடியும் கடையில கொண்டு போயி என்னால மாத்திட்டு இருக்க முடியாது......!"

"மினு கிட்ட எல்லாத்தையும் பேசி உன்னோட போட்டோவையும் அனுப்பி வச்சாச்சுப்பா! சீக்கிரமா அந்த தடியன அங்கிருந்து
பொள்ளாச்சிக்கு வர்ற உருளைக்கிழங்கு லாரியில போட்டு அனுப்பி விடுங்க மிஸ்டர் ரேஷ்னு உந்தங்கச்சி குலம் கோபமா எங்கிட்ட சொன்னாப்பா! அரைகொறயா சாப்பாட்ட முழுங்காதடா; நொறுங்க தின்னா நூறு ஆயுசுன்னு சொல்லியிருக்காங்க. நல்லா வாய்க்குள்ள வச்சு மென்னு முழுங்கு! எப்டியிருக்கு சாம்பார் சாதமும், வஞ்சிர மீன் ஃப்ரையும்?" என்று கேட்டவனிடம்,

"என்னவோ இது நீங்க பண்ணுன சமையல் மாதிரி எப்டியிருக்குன்னு வேற எதுக்கு கேள்வி கேக்குறீங்க? மிஸ் சந்தனாவோட அப்பா செஞ்சு குடுத்தது தான இந்த சாப்பாடு? அவர்ட்ட சாப்பாடு சூப்பர்; அதுக்காக அவருக்கு நா ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. உருளைக்கிழங்கு லாரியில வரச் சொன்னவள ஊருக்குப் போயிட்டு அப்புறமா கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி புன்னகையுடன் தன் வயிறு நிரம்ப சாப்பிட்டு எழுந்தவன் தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி ஒதுக்கி வைத்து விட்டு கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now