❤ சிறுநகை 43

371 29 19
                                    

"அங்க நம்ம வீட்ல ஒக்காந்து விடிய விடிய ஒரு லேண்ட்ஸ்கேப் பெயிண்டிங்க போட்டு முடிச்சீங்களே? அது இப்ப என்ன ஆச்சுன்னு தான் கேட்டீங்களா? இல்ல அத எவ்ளோ விலைக்கு வித்தேன்னு தான் கேட்டீங்களா?" என்று கதிர் தன்னுடைய ஆர்ட் கேலரிக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியாக இதைக் கேட்ட சஞ்சீவைப் பார்த்து முகம் இறுகிப் போய் நின்றிருந்தான் மிஸ்டர் ரேஷ்.

"நோ நோ நோ.... நோ டென்ஷன்! நீங்க நம்ம வீட்ல ஒக்காந்து, நம்ம வீட்டையே வரைஞ்ச பெயிண்டிங் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஸோ அந்த பீஸ்க்கு ஏத்த காஸ்ட்லியான ஃப்ரேம போட்டு, அத நம்ம வீட்ல ஹால்ல செண்டர் ஆஃப் அட்ராக்ஷனா மாட்டியாச்சு! அம்மா உங்க கிட்ட அதுக்காக ஒரு தேங்க்யூ மட்டும் சொல்ல சொன்னாங்க! அத சொல்லிட்டேன் அவ்ளோதான்!" என்று சொன்ன சஞ்சீவின் பேச்சில் கதிர் அவன் தலையில் சிரிப்புடன் லேசாகத் தட்டினான்.

"இந்தாங்க... உங்களுக்காக இந்த தடவை பொள்ளாச்சியில இருந்து
நான் வாங்கிட்டு வந்த கிப்ட்ஸ்;
கனவு கரையும் நேரம், பிருந்தாவனமும் நொந்த குமாரனும், இந்திய நேரம் 2 ஏஎம்!
உங்க பேவரைட் ஆத்தரோட
இந்தக் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா இல்லையா?"

"அதென்ன..... நாவல் படிக்குறதுன்னா ஆன்லைன் ப்ளாட்பார்ம்ஸ்ல எல்லாம் படிக்காம, புக்கை கையில எடுத்து, வாசம் புடிச்சுத்தான் படிப்பேன்னு ஒரு அடம் உங்களுக்கு? இங்க இருந்து போனப்ப மொத்தமா எல்லாருக்கும் ஒரே புக் வாங்கிட்டுப் போன மாதிரியில்ல...... நீங்க சொல்ற மாதிரி இந்த புக்ஸ் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தேடிப் பாத்து வாங்குனது! ஓகேதான?" என்று சொன்ன சஞ்சீவிடம் ஆச்சரிய மிகுதியுடன்,

"டேய்..... சஞ்சீவ் தானா நீ? எனக்குப் புடிச்ச நாவலெல்லாம் வாங்கிட்டு வந்து எங்கிட்ட குடுத்து இதெல்லாம் படிச்ச கதையா, படிக்காத கதையான்னு வேற கேக்குற பாரு! என்ன ராசா இதெல்லாம்? ஊர்ல இருந்தப்ப
என்னோட எக்ஸ் எம்ப்ளாயின்னு சொன்னதெல்லாம் சும்மா வாய்க்கு வந்த பேச்சு தான? இந்த அளவுக்காடா தம்பி உனக்கு கதிரண்ணே மேல பாசம்?" என்று கேட்டு உணர்ச்சி வயப்பட்டான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now