❤ சிறுநகை 41

393 30 10
                                    

"ம்மா..... இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம அழுதுட்டு இருக்கீங்க? நான் அவங்கையில குடுத்த பணம் நனைஞ்சு இருக்காம்; காசோட அரும உனக்குத் தெரியுதான்னு கேட்டுட்டு
இந்த நோட்டெல்லாம் எனக்கு வேண்டாம்; வேற ரூபாய் நோட்ட குடுன்னு பாதி தூரம் போயிட்டு, திரும்ப வந்து பணத்த மாத்தி வாங்கிட்டு போறான் அந்த ஆளு!"

"அந்த ஆள திட்டிட்டமேன்னு நினைச்சு நீங்க இங்க ஒக்காந்து அழுதுட்டு இருக்கீங்க! ஊருக்கு வரட்டும். அவரு இனிமே உங்கள ஒருவார்த்த பேசாத அளவுக்கு நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்; இப்ப கொஞ்ச நேரம் அமைதியா இருங்கம்மா!" என்று பாகேஸ்வரியை தேற்றியவனிடம்,

"இல்லய்யா..... உங்கப்பா என்னைய திட்டுனதுக்காக நான் அழல! மருமகள கண்டபடி பேசிட்டு போயிட்டாரேய்யா? அதோட பொறந்த வீட்ல ராணி மாதிரி வளந்த புள்ளைய கைய ஓங்கி அடிக்கப் போயிட்டாரே?
அத நினைச்சுத்தே மனச ஆத்த மாட்டாம அழுவுறேன்....!" என்று சொல்லி பொங்கிய கண்ணீரை தன் சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டார் கதிருடைய தாய்.

"சரி விடுங்கம்மா..... லஷ்மிய பத்தி கண்டபடி பேசுறப்பவே அந்தாளு சட்டையப் புடிச்சுருக்கணும் நானு! அப்டி புடிச்சுருந்தா உங்களயும் வாய்க்கு வந்தபடி பேசியிருக்க மாட்டான்! அந்த ஆளால என்னிக்குமே உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கப்போறதில்ல; அதுனால அவன ஒரு ஓரத்துல ஒதுக்கி வச்சுட்டு, முடிஞ்ச அளவுக்கு நிம்மதியாவாவது இருக்க முயற்சி பண்ணுங்க!" என்று சொன்ன கதிரை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தனா.

தன்னுடைய குடும்பத்திலும் அன்னையின் ஊதாரித்தனத்தால் அவள் கொடுத்த விலை தான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே? கதிர், பாகேஸ்வரி என்ற இரண்டு அருமையான உறவுகளை கூட புறந்தள்ளும் அளவிற்கு
இந்த வீட்டில் ஒருவருக்கு ஊதாரித்தனம் தலைக்கேறி ஆட்டுவிக்கிறது என்று நினைத்து ஒரு வருத்தச் சிரிப்பை உதிர்த்தாள்.

இதழின் ஓரத்தில் சின்னதாக புன்னகைக்கும் போதும், உற்சாகத்தில் அவளைப் பார்த்து கண்சிமிட்டும் போதும், காதல் கொண்டு அவளருகில் மயங்கி நிற்கும் போதும் கதிர் எவ்வளவு அழகாக தெரிவானோ, இப்போது அதே அளவிற்கு பரிதாபமாக தெரிந்தான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now