❤ சிறுநகை 39

375 25 4
                                    

ஞாயிற்றுகிழமை காலையில் கல்பனாவின் வீட்டின் காம்பவுண்ட் தாண்டி பின்புறமுள்ள கடற்கரை
மணல்வெளியில் ஜெபா, கதிர் ஜனார்த்தனன், கல்பனா நால்வரும் இரண்டு அணியாக பிரிந்து பீச்பால் விளையாடிக் கொண்டிருந்தனர்.

"கதிர் இந்த கேம சூப்பரா விளையாடுவான்..... நீங்க அவன் கூட பேர் பண்ணிக்குறீங்களா?" என்று கேட்ட கல்பனாவிடம் உற்சாகமாக தலையாட்டிய ஜெபா,
விளையாட்டை ஆரம்பித்த பிறகு நான்கைந்து முறை கதிரை "கான்சென்ட்ரேட் பண்ணி வெளாயாடுங்க கதிர்ணா! பால் வர்றத பாக்காம, எங்க வானத்த பாத்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?" என்று திட்டினான்.

இரண்டு தடவை காதில், முதுகில் பந்தால் அடிவாங்கிய கதிருக்கு இன்று பீச்பால் விளையாடும் ஆசை சுத்தமாக இல்லை. அவனது மனது வேறு இடத்தில் இருந்தது.

"என்ன கதிர்.... போதும் போதும்ங்குற அளவுக்கு இவள பால் பின்னால நீங்க ஓட விடுவீங்கன்னு உங்கள பத்தி கல்பனா பயங்கர பில்டப் குடுத்துட்டு வந்தா! இங்க நீங்க என்னடான்னா பால எடுக்கறதுக்கு பதிலா குனிஞ்சு பீச் மண்ணை அள்ளிக்கிட்டு இருக்கீங்க? வாட்ஸ் ராங்?" என்று கேட்ட ஜனார்த்தனனிடம் சிரிப்புடன்,

"அது ஒண்ணுமில்ல ஜனா.....
சந்தனா இங்க வராதது தான் ராங்!
சும்மா நேரமே நம்ம ஓவியருக்கு கற்பனை பிச்சிக்கிட்டு கொட்டும்! இந்த தடவ அவர் கேர்ள்ப்ரெண்டோட வேற வந்துருக்காரு! அம்மாட்ட கல்யாணம் பண்ணிக்குறதுக்கு சம்மதம் வேற வாங்கிட்டாரு. இந்தா அவர் பக்கத்துல நிக்குற சந்தனாவோட தம்பியும் அவங்களோட மேரேஜ்க்கு புல்
கோஆப்பரேஷன் குடுக்குறாரு! பின்ன நம்ம தலைவருக்கு கனவு காணுறதுக்கு வேற காரணமா வேணும்? அவனுக்கு நாமளே கண்ணுக்கு தெரியுறோமோ இல்லையோ? இதுல பால் எங்க கண்ணுக்கு தெரியுறது? அதான் கை, காலுல எல்லாம் அடி வாங்கிட்டு இருக்கான்.....!" என்றாள் கல்பனா.

"ஆமா... நீங்க சொல்ற மாதிரி இன்னிக்கி எனக்கு கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது. அதுனால
இன்னிக்கு ஒருநாளைக்கு மட்டும் நீங்களும் ஸாரும் ஆப்போஸிட்ல நின்னு விளையாடுங்க அக்கா! நான் அப்டியே கொஞ்ச தூரம் கடல்ல கால் நனைச்சுக்கிட்டே வாக்கிங் போயிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு பந்தை ஜனார்த்தனனிடம் பாஸ் செய்தவன் ஜெபாவையும் தன்னுடைய கைப்பிடியில் இழுத்துக் கொண்டு சென்றான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now