❤ சிறுநகை 35

Start from the beginning
                                    

ஒருத்தரைப் பிடிக்கா விட்டால் அவர்களிடம் அவள் எவ்வளவு ராட்சஸியோ, அதைப் போல் ஒருவரைப் பிடித்து விட்டால் அவள் அவ்வளவு தேவதை..... அவளுடைய இந்த இயல்பையும் நன்றாக தெரிந்து வைத்திருந்ததால் தானே அவன் இத்தனை வருடங்களாக பொறுமை காத்தாலும், அவளைத் தவிர வேறு ஒருத்தி என் வாழ்வில் இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் நின்றது......?

"கதிரு.... நீ சொல்றதெல்லாம் கேக்கயில என் உடம்பே நடுங்குதுய்யா! இத்தன கட, ஒன்னோட வரையுற வேல எல்லாத்தையும் நீ ஒருத்தனே பாத்துடலாமாய்யா? இந்த வீடு நம்மளதுன்னு கடசி வரைக்கும் உங்கப்பாட்ட சொல்லிடாத தங்கம்! அந்த மனுசன் கல்பனாக்காவ வெளிய போன்னு சொல்லிட்டு, அந்த வீட்டுக்குள்ள போயி ஒக்காந்துக்கிட்டு தான் மறுவேல பாப்பாரு!" என்று சொன்ன தன்னுடைய தாயிடம் சற்று யோசனையுடன்,

"அதுக்குத்தாம்மா நான் உங்கள எங்கூட வந்துடுச் சொல்றேன்! எப்டி யோசிச்சாலும் இந்த ஊரு எனக்கு ஏதாவது ஒரு வலியத் தான் நியாகப்படுத்திட்டே இருக்கு! அதுனால பெரிய வீட்ல கல்பனாக்காவே எப்பவும் இருக்கட்டும்! நீங்க இப்பயாவது எங்கூட வந்துருங்க! எல்லாரும் ஒரே வீட்ல இருக்கலாம்!"

"ஒரு வாரம் முன்னால கல்பனாக்காவோட வீட்டுக்காரரு என்னைய போன்ல கூப்ட்டுருந்தாரு. வெண்மதி ஸ்கூல்ல டூருக்கு போக ஃபீஸ் கட்டிட்டு வர சொல்லியிருக்காங்க. அன்னிக்கு கண்டிப்பா பணத்த கட்டியே ஆகணும்; அப்போ பாத்து
நம்ம குட்டி நிலாவுக்கு உடம்பு சரியில்லன்னு அக்கா டாக்டர்ட்ட போறதுக்கு வேற அப்பாயின்மெண்ட் கேட்டு வச்சு இருந்துருக்காங்க. அதுனால ஹாஸ்பிட்டலுக்கு போறதுக்கு முன்னால அந்த பணத்த இவர்ட்ட குடுத்து கொஞ்சம் இந்தப் பணத்த வெண்மதி ஸ்கூல்ல அவ பேருல எக்ஸ்கர்ஷன் ஃபீஸா கட்டி ரெஸிப்ட் வாங்கிட்டு வந்துடுறீங்களா அப்பான்னு கேட்டுருக்காங்க. இந்தாளு மண்டைய ஆட்டி அந்தப் பணத்த வாங்கிப் பையில வச்சுட்டு, அதுக்கப்புறம் கல்பனாக்காட்ட அதப்பத்தி வாயவே திறக்கலயாம். ஃபீஸ ஸ்கூல்ல கட்டவும் இல்லையாம்.........!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now