❤ சிறுநகை 35

382 26 4
                                    

சந்தனா பேசிய பேச்சுகளின் சூடு அடங்கும் முன் கதிர் பாகேஸ்வரியிடம் இத்தனை ஆண்டுகளாக தன் மனத்திற்குள்ளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ரகசியங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டித் தீர்த்து விட்டான்.

சஞ்சீவினுடைய உற்ற ஆலோசனை மற்றும் துணையால் நாகர்கோவிலில் தன்னுடைய ஆர்ட் கேலரியை நிறுவியது, பிறகு அங்கேயே வீடு வாங்கியது, சென்னையில் இந்த வீடு வாங்கியது, மெல்ல அடுத்தடுத்த சொத்துக்களையும் வாங்கியது, அவனுக்கு ஆலென் ஸார் கொடுத்த பணத்திற்கு மேலும் அவரிடம் திரும்ப கொடுத்து விட்டது என்று பணம் சம்பந்தப்பட்ட ஒரு விவரத்தை கூட மறைக்காமல் அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.

சந்தனாவின் வார்த்தைகளும், தன்னுடைய தந்தை இங்கு இல்லாமல் இருந்ததும் மனதிலுள்ள எல்லாவற்றையும் தாயிடம் வெளிப்படுத்த
அவனுக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்தது.

இன்னும் நூறு வருடங்கள் ஆகியிருந்தாலும் சந்தனாவைப் போல் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என தன் தந்தையைப் பற்றி பாகேஸ்வரியிடம் அவனால் பேசியிருக்கவே முடியாது. தன் அன்னை எவ்வளவு வெகுளியாக இருந்தாலும், இத்தனை ஆண்டு தாம்பத்யத்தில் கணவனைப் பற்றி கொஞ்சங்கூடவா புரிந்து கொள்ளாமல் இருந்திருப்பார்கள்?

அவரின் போக்கு தனக்குத் தெரியாதென தாய் நடிக்கும்போது, நான் மட்டும் அதை ஏன் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துத் தான் கதிர் இவ்வளவு வருடங்களாக தன்னுடைய தந்தையின் கடிவாளத்தை மிகவும் இறுக்காமல் சற்று தொங்கலிலேயே இருக்கட்டும் என விட்டு வைத்திருந்தான். ஆனால் இன்று தன் தாயிடம் அனைத்தையும் பேச வேண்டிய அவசரமும் அவசியமும் அவனுக்கு ஏற்பட்டு விட்டது.

"உங்க பையன் வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாதவன் இல்ல....!" என்று சொன்னதில் இருந்து, "நான் கூடிய சீக்கிரத்துல மிஸஸ் கதிரா உங்கள சந்திக்குறேன்!" என்று முடித்தது வரை தன் வார்த்தைகளினாலேயே சந்தனா அவனுக்கு எத்தனை தைரியத்தை கொடுத்து அவனுடைய வாய்ப்பூட்டை ஒரேடியாக உடைத்து விட்டாள்?

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now