❤ சிறுநகை 33

373 28 10
                                    

"பாரு! நல்லாப் பாரு! எங்கப்பன் இப்டிப்பட்ட ஒரு பொறம்போக்கா இருக்கான்னதுனால தானடா நானும் எங்கம்மாவும் உங்க வீட்ல வந்து சட்டி பெட்டிய கழுவுனோம்? இவன் பெரிசா இப்ப அந்தாளு மூஞ்சிய உத்து உத்துப்பாத்து எங்கப்பன் ஒரு 420 னு புதுசா கண்டுபிடிக்குறான்! போடாங்கு புளிக்கொதக்கு! மனசுக்குள்ள பெரிய நாகர்கோவில் ஜேம்ஸ்பாண்ட்னு நெனப்பு!" என்று மெதுவான குரலில் ஜெபாவை திட்டிக் கொண்டிருந்தான் கதிர்.

"நம்ம கதிருக்கும் எனக்கும் இந்தப் பொண்ண சின்னதுலயே ரொம்ப பிடிக்குமுங்க! நம்ம சுமாம்மாவ பத்தி நான் உங்ககிட்ட நிறைய சொல்லியிருக்கேன்ல..... அவங்க பொண்ணும், பையனுந்தான் இந்தப் புள்ளைங்க!"

"சின்னதுல அது வீட்டுக்குள்ள நாங்க போயி வாழ்ந்தோம்; இப்ப நம்ம வீட்டுக்கு அது வந்து வாழப்போவுதுங்க! இந்த கல்யாணத்துக்கு உங்களுக்கு சம்மதந்தானுங்களே?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,

"இல்ல பாகேஸூ..... எனக்கு இந்த கல்யாணத்த நடத்துறதுல விருப்பம் இல்ல!" என்று சொன்னார் கிருஷ்ணராஜ்.

"என்ன.....ங்க! இப்டி சொல்றீங்க? இந்தப் புள்ளைய நம்ம
கதிரு விரும்புறாங்க! நம்ம பெத்த புள்ள அவன் மனசுக்குப் பிடிச்ச பொண்ண கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ வேண்டாமா? ஏன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்றீங்க?" என்று தன்னுடைய கணவனிடம் கேட்டார் பாகேஸ்வரி.

"வாய்ப்பு இருந்த காலத்துல நல்லா ஓஹோன்னு வாழ்ந்துட்டு, இப்ப ஒட்டுக்கா அம்புட்டு பேரும் வீட்ல வெட்டியா ஒக்காந்துட்டு கெடக்குதுகன்னவுடனே நம்ம புள்ளைய இடுப்புல முடிஞ்சுக்க
கேக்குதுகளா? காரெல்லாம் வச்சுருக்கானுல்ல..... வரும்படியும் நல்லா வருதுன்னு வேற சொல்றான்! அதுனால வந்த லவ்வா இருக்கும் பாகேஸூ!"

"இந்த குட்டி சின்னவயசுலயே நம்ம பயல அப்டி இப்டின்னு பேசி மயக்கி வச்சுருப்பாளா இருக்கும்! இப்ப ஒண்ணுமில்லாம ரோட்டுல வந்து நிக்குற நெலம வந்தவுடனே நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவமான்னு இவங்கைய புடிச்சுட்டு இளிச்சுட்டு நின்னுருப்பா! நம்ம புள்ளைக்கும் ஒரு வெவரமும் பத்தாதா?"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now