❤ சிறுநகை 31

406 28 4
                                    

கதிர் சந்தனாவின் வீட்டில் அவனுடைய அம்மாவுடன் வாதம் செய்து கோபித்துக் கொண்டு போய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சந்தனா எத்தனை முறை பாகேஸ்வரியிடம் இந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசினாலும், ஒரு தெளிவான முடிவெடுக்க தெரியாமல் அவர் அழுகையில் தான் பேச்சை முடித்தார்.

பாகேஸ்வரிக்கு கணவர், கதிருக்கு அப்பா.... அவரிடம் இருவரும் ஒரு சுபநிகழ்வைப் பற்றியே தெரிவிக்க விருப்பப்படவில்லை என்றால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்த சந்தனா தன் முயற்சியாக இந்த இரண்டு நாட்களாக காலை ஒரு முறையும், இரவு ஒரு முறையும் அவனிடத்தில் அலைபேசியில் பேசி அவனை சற்று சாந்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவர்களுடைய திருமணத்திற்கு பெரிதாக எந்த தடையும் இல்லை என்றாலும், சந்தனாவிற்கு இந்த திருமணம் எவ்வாறு நடக்கப்போகிறது? கதிருடைய அப்பாவிடம் விஷயத்தை தெரிவித்து அவரும் பாகேஸ்வரி ஆன்ட்டியுமாக தன்னுடைய வீட்டில் வந்து பெண் கேட்கப் போகிறார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை.

வருவதை வரும் நேரத்தில் சந்திந்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தவள் இரண்டு நாளாக அவனிடம் பேசுவதை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருந்தாள்.

அன்றிரவில் இரவு உணவு நேரத்தில் படுக்கையறையில்
அவளது மொபைல் சிணுங்க ஹாலில் இருந்து வந்து அலைபேசியை எடுத்தவளிடம் கல்பனா பேசினாள்.

"ஹலோ சந்தனா! நல்லா இருக்கீங்களாம்மா? நான் கதிரோட புரஃபொஸர் பொண்ணு; எம்பேர் கல்பனா! உங்ககூட பேசணும்னு ரெண்டு நாளா யோசிச்சுட்டுருந்தேன். அதான் அம்மாட்ட உங்க நம்பர் வாங்கி கூப்டேன். அந்தப்பையன் இந்த தடவையும் அவங்க கிட்ட சண்ட போட்டுத்தான் போன வச்சுட்டுப் போனானாமே? நீங்க ரெண்டு பேரும் ஒருதடவ சென்னை வந்துட்டுப் போக முடியுமாம்மா? நம்ம எல்லா விஷயத்தையும் போன்லயே பேசி முடிக்க முடியாதுல்ல?" என்று கேட்ட கல்பனாவிடம் சில நிமிட யோசனைக்குப் பின்னர்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now