❤ சிறுநகை 30

Start from the beginning
                                    

"உனக்கு அவங்க கூட இருக்குறது ரொம்ப பிடிக்கும் வேற..... அவங்க எனக்கு கதையெல்லாம் சொல்வாங்க. என் முடியெல்லாம் அவ்ளோ அழகா மெயின்டைன் பண்ணி குடுப்பாங்க; அதுவுமில்லாம ஒரு நல்ல என்விரோண்மெண்ட்ல இருந்தாலே உன்னோட கோபம், இறுக்கம் இதெல்லாம் பாதியா குறைஞ்சிடும்னு நான் நினைக்குறேன். அப்புறம் எதுக்கு நீ தனியா இருக்கணும்?  நீ என்ன நினைக்குற?" என்று அவனிடம் தனது கருத்தை சொல்லி அதற்கு அபிப்ராயமும் கேட்டாள் சந்தனா.

"இங்க இருக்குற வீடு, கடைங்க எல்லாம் என்னோடதுன்னு அம்மாவுக்கு தெரியாது லஷ்மி! சென்னையில அவங்க இருக்குறதும் நம்மளோட வீடு தான்; அதையுமே நான் அவங்க கிட்ட சொல்லல. எனக்கு அம்மாவ இங்க கூட்டிட்டு வந்து எங்கூட வச்சுக்கணும்னு ரொம்ப ஆசதான்!"

"அவங்க இங்க வந்தா, அந்தாளும் கூடவே வருவான்! என்ன வேல செய்யுற? எவ்ளோ சம்பாதிக்குற? எவ்ளோ சேத்து வச்சிருக்க? இப்ப எனக்கு அதுல எவ்ளோ தருவன்னு அவனோட பேச்சு பூராவுமே பணத்தப் பத்தினதா இருக்கும்! நம்ம கிட்ட இவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சா, முதல்ல எத வித்து எனக்குத் தர்றன்னு தான் கேப்பான்!"

"ஒரு ஆத்துல குளிச்சுட்டு வெளியேறுறோம்னு வையேன்.... சேறும், சகதியுமாக கெடக்குற கரையும் இருக்கும்! அத விட பெட்டரா நல்ல படித்துறையோட ஒரு கரையும் இருக்கும்; எங்க அம்மாவ பொறுத்தவரைக்கும் அவங்க கிட்ட இப்டி ரெண்டு ஆப்ஷன நீட்டுனோம்னா எங்கப்பன் தான் அவங்களுக்கு எப்பவுமே நல்ல படித்துறை! புருஷன் மேல இருக்குற அன்புல போறாங்களோ, இல்ல மறுபடியும் விட்டுட்டு ஓடிடுவானோங்குற பயத்துல போறாங்களோ தெரியாது.....!" 

"....ஆனா முதல்ல
அவம்பக்கந்தான் போவாங்க.
அவங்களோட பாசம் வேணும்னா நான் எப்பவும் ஒரு அப்ளிகேஷன போட்டு வெயிட் பண்ணத்தான் செய்யணும்! கெளம்பட்டா லஷ்மி? இப்டியே பேசிட்டு இருந்தா நான் கொஞ்ச நேரத்துல கடுப்பாகி  பாக்குற எல்லாரையும் கடிச்சிக்கிட்டே கெடப்பேன். என் தலையில ரெண்டு போட்டு, அதட்டி வைக்க நம்ம தம்பி வேற எம்பக்கத்துல இல்ல!" என்றான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now