❤ சிறுநகை 28

Start from the beginning
                                    

எனக்கு வேண்டுமென்பதை வாங்கித்தர என்னுடைய குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற திருப்தி அவளுக்கு! அவள் கேட்டதை வாங்கித் தந்த நிறைவு அவளது குடும்பத்தினருக்கு; இப்படியான ஒரு அன்பு தான் ஆலென், சுமலதா, சந்தனா, ஜெபா நால்வரையும் ஒரே வீட்டிற்குள் இன்னமும் கட்டி வைத்திருந்தது.

இதில் இன்னொருவனும் புதிதாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு நின்ற போது ஏற்பட்ட திகைப்பு தான் அவளுக்கு இன்னும் போகவில்லை.

"இப்டி திடீர்னு நீ எங்கிட்ட என்ன வேணும்னு கேட்டா எனக்கு ஒண்ணும் தோணலையே ரேஷன்? நேத்தே உங்கிட்ட இருந்து நான் சாக்லேட் வாங்கிட்டேன் வேற.......
நிஜமாவே இப்போதைக்கு எனக்கு ஒண்ணும் தேவையில்ல!" என்று அவனிடம் சொன்னாள் சந்தனா.

"அதான.....? எங்கையில இருந்து ஒரு பொருள நீ வாங்கிக்கிட்டா தான் ஊரு அழிஞ்சுடுமே?
எங்கிட்ட இருந்து வேலை வேண்டாம்; பணம் வேண்டாம்;  பொருள் வேண்டாம்...... ஒரு ஸ்வீட் பாக்ஸ் கூட வேண்டாம்;

"நாளைக்கே உங்க அம்மா உங்கிட்ட இவன் உனக்கு வேண்டாம்னு சொன்னா நானும் உனக்கு வேண்டாம்! அப்டிதான சந்தானலஷ்மி?" என்று அழுத்தமான குரலில் கேட்டவனிடம் கோபமாக கத்துவதற்கு முன், "இந்தா ஆரம்பிச்சுட்டான்டா!" என்று நினைத்து அவளுக்குள்ளாகவே நொந்து கொண்டாள் சந்தனா.

"லூசுப்பயலே; ஏன்டா திரும்ப திரும்ப இப்டியே பேசிட்டு இருக்க? யார் என்ன சொன்னாலும் நீ எனக்கு வேணும். இதுவரைக்கும் எப்டியோ எனக்குத் தெரியல ரேஷன்; பட் உன்னோட ட்ரூ லவ்வ பார்த்த பிறகு, எனக்கு எவ்ளோ கில்டியா இருக்கு தெரியுமா? இவன் இந்த அளவுக்கு நம்மள விரும்புறதுக்கு அப்டி நம்ம என்ன செஞ்சுட்டோம்னு தோணுது. எங்க என்னை மிஸ் பண்ணிடுவோமோங்குற பயத்துலயே நீ பேசுறது எனக்கு சிரிப்பா வருதுடா!

"நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு நான்  மோஸ்ட் வாண்டட் பிகரும் கிடையாது! இப்போதைக்கு
உன்னை விட்டா என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேற யாருமேயில்ல! என்னவோ பத்து, பன்னண்டு பேர் எனக்காக லைன்ல நிக்குற மாதிரி, நீ எப்போ பார்த்தாலும் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?"

"உன்னைய மாதிரி எடுத்த எடுப்புலயே ஹக், கிஸ்னு நான் பேசாம இருக்கலாம்..... பட் எனக்கு உன் மேல தனியா ஒரு அக்கறை வந்துடுச்சுடா! எனக்கு தெரிஞ்ச விதத்துல உங்கிட்ட அதக் காட்டுவேன்; எந்த காரணத்துக்காகவும் நான்
உன்னை விட்டுட மாட்டேன்..... அம்மா மேல ப்ராமிஸ்! இது எப்பவும் போல கை மேல கை வைக்குற ப்ராமிஸ் இல்ல ரேஷன்! ஹோல் ஹார்ட்டட் ப்ராமிஸ்! சீக்கிரமா வீட்டுக்கு வா.....!" என்று சொன்னவளிடம் சற்றே அமைதியடைந்த மனத்துடன்,

"சரி! உனக்கு எங்கிட்ட கேக்க ஒண்ணுமில்லன்னாலும், எனக்கு உங்கிட்ட குடுக்குறதுக்கு நிறைய விஷயம் இருக்கு! நான் எனக்குப் பிடிச்சத உனக்காக வாங்கிட்டு வர்றேன் லஷ்மி! அத நீ கண்டிப்பா எங்கிட்ட இருந்து வாங்கிக்கணும் சரியா?" என்று அவளிடம் சொல்லி விட்டு அவளது போன்காலை கட் செய்தான் கதிர்.

"குடுக்குறதுக்கு நிறைய விஷயமா? அய்யய்யோ கர்த்தரே இந்த முக்காசைஸூ திமிங்கலம் பேச்சாலயே நம்மள பயமுறுத்துறான்..... தைரியமா இரு சந்து! எது வந்தாலும் பாத்துக்கலாம்!" என்று அவளுக்கு அவளே தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள் சந்தனா.

சிறுநகை மலரும்!

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now