❤ சிறுநகை 28

Start from the beginning
                                    

"இனிமே உங்கிட்ட நானும் பத்து நிமிஷத்துக்கு மேல பேசுவேன் ரேஷன்!" என்றாள் சந்தனா.

"வாம்மா! என் வசந்த கோகிலமே..... இனிமே உங்கிட்ட நானும் பேசுவேன் ரேஷன்னு எங்காதுல
குயிலப் போல கூவுறது நீயேதானா? எப்டி யோசிச்சாலும் நீதானா பேசுறதுன்னு எனக்கு சந்தேகமா இருக்கேம்மா? இப்ப என்னைய கழுவி ஊத்துறதுக்காக கூப்ட சரி! அர்த்த ராத்திரில எதுக்கு கூப்ட?" என்று கேட்டான் கதிர்.

"ம்ம்ம்... அது வந்து....! மார்னிங் இங்க சாப்ட வர்றியான்னு கேக்குறதுக்காக தான் கூப்டேன்!" என்று தடுமாறிய குரலில் அவனிடம் சொன்னாள் சந்தனா.

"நிஜமாத்தான் சொல்றியான்னு தெரியல..... உன் வாய்ஸ கேட்டா நீ பேசுறது நிஜம் மாதிரியும் தெரியல!
ஆனாலும் இத கேக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு லஷ்மி! ஆலென் ஸார் பாவம்..... எதுக்கு அப்பப்ப எனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்லி அவர வேற தொந்தரவு பண்ணிக்கிட்டு? நான் சாப்டதுக்கப்புறமே அங்க வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்மா!"

"இத்தன தடவ நீ என்னை கூப்டதுக்கே உங்க வீட்டுக்கு ஒருதடவ வந்துட்டுப் போகணும்! நான் வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் லஷ்மி?" என்று மென்குரலில் கேட்டவனிடம் நேற்று சின்னக்குழந்தை போல சாக்லெட்டை கேட்டு வாங்கி விட்டோம்; இன்று இந்த உலகத்தில் இருக்கும் எந்தப் பொருளை வாங்கி வரச் சொல்லிக் கேட்பது என்று வாழ்நாளில் முதல்முறையாக சந்தனாவிற்கு குழப்பம் ஏற்பட்டது.

ஆலென், சுமலதா, ஜெபா இவர்கள் மூவரில் யார் எந்த நேரம் அவளிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாலும் அவர்களிடம் கேட்பதற்கு சந்தனாவிடம் ஏதாவது ஒரு பொருளுடைய தேவை கண்டிப்பாக இருக்கும்.

அவள் வேலை பார்த்த கடையிலேயே அவளுக்கு தேவைப்படும் நிறைய பொருட்கள் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு அவள் அந்தப் பொருட்களை தந்தை, தாய் இல்லை தம்பியிடமிருந்து தான் வாங்கி வரச் சொல்லி வாங்கிக் கொள்வாள். அவள் அப்படிக் கேட்கும் விலையுயர்ந்த பொருட்கள் அவித்த சோளமாக இருக்கலாம்; இல்லை சுடிதார் நாடாவாக இருக்கலாம்..... அதுவுமில்லையென்றால் அவளது உதடுகளுக்குப் பயன்படும் லிப் பாமாக கூட இருக்கலாம்!

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now