❤ சிறுநகை 28

349 26 1
                                    

காலை அட்டெண்ட் செய்து, "ஹலோ.... என்னடா லஷ்மி திடீர்னு போனெல்லாம்?" என்று அவளிடம் கதிர் கேட்டது தான் தாமதம்.....

லாரியிலிருந்து மூட்டையாக கொண்டு வரும் காய்களை கடையில் வந்து மூட்டையைப் பிரித்துக் கொட்டிக் கவிழ்ப்பது போல ஒரு கூடை நிறைய அவனுக்கென சேர்த்து வைத்திருந்த வசவுகளை அவனிடம் கொட்டி தீர்த்து விட்டாள் சந்தனா.

"தண்டக் கருமாந்திரமே.... தூங்குறப்ப தான் போன எடுக்க மாட்ட; காலையில முழிச்சவுடனேவாச்சு என்னைய கூப்டணும்னு அறிவு இல்ல உனக்கு? எந்நேரமும் கையில வச்சுட்டு, அதப் பாத்துட்டே இருக்காத உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு? ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன வீட்ல வாங்கி வைக்க வேண்டியதுதான?
மணி எட்டு ஆகப்போகுது! இவ்ளோ நேரமா மொபைல்ல என் மிஸ்டு கால்ஸ கூடப் பாக்காம என்னடா பண்ணிட்டு இருந்த?" என்று கேட்டவளிடம் ஆச்சரியமான குரலில்,

"மிஸ்டு கால்ஸா........ எனக்கு நீ தந்தியா? ஒரு நிமிஷம் இரு!" என்று சொன்னவன் அவசர அவசரமாக அவனது அலைபேசியை செக் செய்ய இரவு ஒன்றரை மணியிலிருந்து காலை வரை அவனுக்கு அவளிடமிருந்து இருபத்தோரு கால்கள் வந்திருந்தன.

அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினால் அளவற்ற மகிழ்ச்சியும், கூடவே முழுஆண்டு தேர்விலும் இதேயே வாங்க வேண்டுமே என்ற புதிய பொறுப்பும் வருவது போல கதிருக்கு லஷ்மி தன்னை இத்தனை தடவை அழைத்திருக்கிறாள் என்பதில் மிதமிஞ்சிய மகிழ்ச்சியும், இப்போது அவளுடைய கோபத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற புதிய
யோசனையும் தலை மேல் வந்து அமர்ந்து கொண்டது.

"கட.....வுளே! இவ கையில இப்ப மட்டும் கிடைச்சேன்? இருக்குற கோபத்துல நம்மள பிச்சு பிச்சு போட்டுடுவாளே? நம்ம சூபொ இவ்ளோ கால் அடிக்குற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்த?" என்று அவனை அவனே கேட்டுக் கொண்டு நிஜமாக அவளுடைய கோபத்தை நினைத்துப் பயந்தான் கதிர்.

"மன்னிச்சிடு லஷ்மி! இத்தன வருஷத்துல ராத்திரில யாரும் எனக்கு கால் பண்ணி கூப்ட்டு பேசுனதேயில்ல! நீ சொன்ன மாதிரி அத வச்சு ஏதாவது வேல இருந்தா தான எந்நேரமும் கையில வச்சுட்டு, அதப் பாத்துட்டே இருக்குறதுக்கு? எனக்கு இதுவரைக்கும் அந்த தேவையே வந்ததில்ல லஷ்மி! பத்து நிமிஷத்துக்கு மேல பேசுறதுன்னா எங்கூட கல்பனாக்கா பொண்ணு இளமதி தான் பேசுவா..... மத்தபடி யாரும்!" என்று சொன்னவனின் வாக்கியத்தை முடிக்க விடாமல்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now