❤ சிறுநகை 27

383 32 6
                                    

ஒன்பது மணியளவில் கதிர் தனக்காக வாங்கிக் கொடுத்திருந்த சாக்லெட்டை ஜெபா இப்போது சாப்பிடக் கையில் எடுத்ததும் சந்தனாவிற்கு கோபம் வந்தது.

"டேய் ஜெபா.... அது கதிர் எனக்காக வாங்கிக் குடுத்த சாக்லேட்; அத தொடுறதுக்கு கைய வைக்காத..... எனக்கு ரொம்ப கோபம் வருதுடா!" என்று சந்தனா தன் தம்பியிடம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளுடைய பேச்சை சற்றும் காதில் வாங்காதவன் போல Ferrero Rocher சாக்லேட்டின் பாக்ஸை திறந்து அதிலிருந்து ஒரு சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டு கண்களை மூடி அதன் சுவையை ரசித்துக் கொண்டிருந்தான் சந்தனாவின் அருமைத்தம்பி.

"ஸோ டெலிஷியஸ் சந்து! நீயும் ஒண்ணு எடுத்து ட்ரை பண்ணிப் பாரேன்!" என்று சொன்னவனுடைய முதுகில் தன்னுடைய கை வலிக்க வலிக்க குத்திக் கொண்டிருந்தாள் சந்தனா.

"எதாவது கேளு..... ம்ஹூம் கேட்டீன்னா தான் அத வாங்கி குடுத்துட்டு ஒன்ன வீட்டுக்குப் போக உடுவேன். இல்லன்னா உட மாட்டேன்!" என்று குழந்தை போல அடம் பிடித்த கதிர் திடீரென அவளிடம் ஒரு விரல் நீட்டி,

"நகைக்கடையில வந்து ப்ளவர் வாஷ வாங்கிக்குடுன்னு கேட்டியே? அந்த மாதிரி ஏதாவது கேட்ட..... டென்ஷனாகிடுவேன் பாத்துக்க!" என்று மிரட்ட சந்தனா சிறு சிரிப்புடன் அவனிடம்,

"எதாவது சாக்லெட் வாங்கிக் குடு ரேஷன்..... சாக்லெட் எல்லாம் என்ஜாய் பண்ணி சாப்ட்டு ரொம்ப வருஷம் ஆச்சு!" என்று சொல்ல அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன்,

"ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு. வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு அவளுக்காக ஒரு சிறிய பெட்டி நிறைய சாக்லேட்டுகளை வாங்கி வந்திருந்தான்.

"ஒண்ணு வாங்கிக் குடுன்னு கேட்டா, எதுக்குடா இப்டி பாக்ஸோட வாங்கிட்டு வந்த? வீட்டுக்குப் போனவுடனே ஜெபா இத அவன்பாட்டுல எடுத்து சாப்ட்டுருவான் தெரியுமா? நீ வாங்கிக் குடுத்தது எனக்கு மட்டுந்தான்!" என்று சொல்லி அந்த சாக்லெட் பெட்டியை நெஞ்சில் அணைத்துக் கொண்டவளைப் பார்த்து சிரித்தவன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now