❤ சிறுநகை 25

Start from the beginning
                                    

"டேய்... என்னைய கீழ விடுறா!  உன்னை மேரேஜ் பண்ணிக்க எங்கம்மா ஓகே சொல்லிட்டதுனால என்னைத் தொட்டு தூக்கிட்டு வர்ற அளவுக்கு திமிராகிடுச்சா ஒனக்கு? உன்னைய உன்னோட கடைக்குள்ள இருக்குற ஆளுங்கள வச்சே சட்டைய புடிக்க ப்ளான் பண்ணதெல்லாம் பத்தாது. வேற ஏதாவது பெரிசா செய்யுறேன் வெயிட் பண்ணு!" என்று சொன்னவளை முதுகுப்புறமாக பிடித்துத் தள்ளி வராண்டாவில் இருந்து ஹாலுக்குள் நகர்த்திக் கொண்டு வந்தான் கதிர்.

"பெரிசா செய்யப் போறியா? நல்லா செய்யி! நானும் அதுக்காக வெயிட் பண்றேன். அத விட எனக்கு என்ன முக்கியமான வேல? இப்ப என்ன கேட்ட.... வேற எதுவும் உருப்படியான வேலை இல்லையான்னு தான? இந்த ஒருவாரம் ஃபுல் அண்ட் ஃபுல்லா கடைங்கள ரவுண்ட்ஸ் அடிக்கத்தான் டைம் ஸ்லாட் போட்டு வச்சுருக்கேன்...!"

"கல்யாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையிலயும் நைன் ட்டூ செவன் இருக்கலாம்னும் ப்ளான் பண்ணியிருக்கேன். இருபது நாள் பிஸினஸ்! அடுத்த பத்துநாள் பெயிண்டிங்க்! அப்பப்போ ஆர்ட் கேலரிக்கும் போயிட்டு வந்துக்க வேண்டியதுதான்! ஓகே தான?" என்று அவள் அபிப்ராயம் வேண்டியவனிடம்,

"என்ன ஓகே தான? இத எதுக்கு எங்கிட்ட கேக்குற?" என்று கேட்டாள் சந்தனா.

"உங்கிட்ட தான் கேக்கணும். உங்கிட்ட தான் சொல்லணும். நீ தான என் பொண்டாட்டி ஆகப் போற? உன் பேமிலியில இருந்து உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டேன்னோ இல்ல காசு குடுத்து வாங்கிட்டேன்னோ நினைக்காத லஷ்மி! எங்கூட இருக்கப்போற வாழ்க்கைய சகிச்சுட்டு கடந்து போகணும்னு பாக்காத! அதுல சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு ப்ளீஸ்!"

"நான் என்ன பண்ணப் போறேன்னு உங்கிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்ன பண்ணப் போற? சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்க மாட்ட! நம்ம பிஸினஸ்ல எதையும் பாத்துக்க மாட்ட! இவ்ளோ பெரிய ஹால்ல தனியாவே உக்காந்துட்டு, உங்கம்மா மாதிரி வறுத்த முந்திரிப்பருப்பு சாப்ட்டுக்கிட்டே சீரியல் பாத்துக்கிட்டு இருக்கப்போறியா? அந்த வேல சீக்கிரத்துல போர் அடிச்சுடுமேம்மா?" என்று அவளின் அருகில் அமர்ந்து கையைப் பற்றிக் கேட்டான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now