❤ சிறுநகை 24

435 29 2
                                    

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைகூடும் தென்றல் சாட்சி சிந்தனையில்
வந்துவந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா.....
என்னுடைய காதலிய
ரொம்பரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும்
ஒட்டி வச்சேன்
வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா.....

என்று காருக்குள் ப்ளூடூத்தைப் பயன்படுத்தி தன்னுடைய பெர்சனல் கலெக்ஷனில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து பாதி பாடல் பாடி, பாதி விசில் செய்து குதூகலித்த படி தன்னுடைய முப்பத்தி ஒரு பற்களையும் அவளிடம் அடிக்கடி காட்டிய படி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"மிஸ்டர் கதிர்.... தலவலிக்குது! தயவுசெஞ்சு பாட்ட ஆஃப் பண்ண முடியுமா?" என்று பெருமூச்சுடன் கேட்டவளைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது அவனுக்கு.

"ஸாரிடா ஃபெதர்! பழிவாங்குறேங்குற பேருல உன்னை நான் ரொம்ப டார்ச்சர் பண்றேன். நீ ஓய்ஞ்சு போய் உக்காந்துருக்குறத பார்த்து எனக்கே எம்மேல கோபமா வருது. ஆனாலும் உன்னை எம்பக்கத்துல கொண்டு வந்து நிறுத்துறதுக்கு இதத்தவிர வேற வழியில்ல! கல்யாணத்துக்கு அப்புறம் உம்மேல நான் பேரல் பேரலா லவ்வ காட்டுறேன். இப்ப நமக்குள்ள நடந்துட்டு இருக்குற அர்த்தமே இல்லாத சண்டைக்காக உன் ரேஷன வெறுத்துடாதடீ எந்தங்கமே!" என்று அவளை மனதிற்குள்ளாக கொஞ்சிக் கொண்டிருந்த கதிர் சந்தனாவிடம்,

"என்ன மிஸ் நிஜாம் வொய்ஃப்.... கடைசில நீங்க இந்த ரேஷன்ஷாப்புக்குல்ல வொய்ஃப் ஆகப் போறீங்க போலிருக்கு? ஸோ ஸேட். இந்த சிச்சுவேஷன் உங்களுக்கு ரொம்ப டார்ச்சரா இருக்கோ? நான் இந்தப் பாட்ட ஆஃப் பண்ணிடுறேன். நீங்க வேணும்னா பாடுங்களேன். தெலுங்குல நிறைய கீர்த்தன எல்லாம் கத்துக்கிட்டீங்களே? அதெல்லாம் நியாபகம் இருக்குதா? இல்ல மறந்துட்டீங்களா?" என்று கேட்டவனிடம் உட்சபட்ச எரிச்சலுடன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now