❤ சிறுநகை 23

399 28 1
                                    

"ஸார் எழுந்திரிங்க! சீக்கிரமா வீட்டுக்கு கெளம்பணும்னு சொல்லிட்டு இப்டி தூங்கிட்டு இருக்கீங்க!" என்று சொல்லி தன்னை உலுக்கி எழுப்பிய கதிரை அரைத்தூக்கத்தில் பார்த்த ஆலென், அந்த அறையில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தார்.

ஆறரை ஆக இன்னும் ஒரு நிமிடம் இருந்தது. அவர் எழுந்து அமர்ந்த நேரத்தில் சரியாக அவருடைய அலாரமும் சிணுங்கியது.

உங்களை எழுப்பவதற்கு முதலில் நான் எழுந்திரிக்க வேண்டுமே என்று நேற்று அவரிடம் சொன்னவன், இன்று குளித்து, நெற்றியில் சின்னதாக ஒரு விபூதி கீற்று வைத்து, அலுவலகம் செல்பவன் போல் ஆலிவ் க்ரீன் அண்ட் ப்ரௌன் நிற கேஷுவல் வியர் அணிந்து முழுதாய் தயாராகித் தான் அவரை எழுப்பவே வந்திருந்தான்.

"எப்ப கதிர் ரெடியான? எப்ப எழுந்திரிச்ச? எங்கயும் வெளிய போறியா? இல்ல என்னை கொண்டு வந்து விடுறதுக்குத் தான் இவ்ளோ டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு நிக்குறியா? மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு ஸ்பீடு ப்ரேக்கர் கூட இல்லாம சும்மா ஹைவே ரோடு மாதிரி இருக்கியேடா? யூ காட் அ நைஸ் பிஸிக் மேன்!" என்று அவனை சிலாகித்தவரிடம்,

"தேங்க்ஸ் ஸார்! காலையில சீக்கிரமா எழுப்பி விடச் சொல்லி
நைட்டே அம்மாட்ட சொல்லிட்டு படுத்தேன்! அவங்க தான் போன் பண்ணி என்னை எழுப்பி விட்டாங்க. இன்னிக்கு காலைல உங்க வீட்ல வந்து பேசி முடிச்சுட்டு, அப்டியே நம்ம கடைங்களுக்கும் ஒரு விஸிட் போயிட்டு வரணும் ஸார்! அதான் சீக்கிரத்துல ரெடியாகிட்டேன். நீங்களும் போய் கொஞ்சம் ப்ரெஷ்ஷாகிட்டு வாங்க. நாம கிளம்பலாம்!" என்று சொல்லி மந்தமாக நின்று கொண்டிருந்த அவரை துரிதப்படுத்தினான் கதிர்.

காரில் அவனோடு வரும் போது ஆலென் அவனிடம் புலம்பிக் கொண்டே வந்தார்.

"கதிர்.... நீ நம்ம வீட்ல வேலை செஞ்ச பையன்னு அவளுக்கு தெரிஞ்சா இரண்டாவது கேள்வியே கேக்காம அப்டியே உன் இடுப்புல எட்டி மிதிச்சி வெளிய தள்ளிருவாடா!" என்று சொன்னவரை பார்த்து முறைத்தவன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now