❤ சிறுநகை 22

Start from the beginning
                                    

"பார்த்து ட்ரைவ் பண்ணிட்டு போங்க! காலையில அம்மா எழுந்திரிச்சவுடனே நான் அவங்க கிட்ட நீங்க கதிர்ணா வீட்டுக்குப் போ!" என்று சொன்ன தன் மகனிடம் வேகமாக தலையாட்டி அவனைப் பாதிப் பேச்சில் நிறுத்திய ஆலென்,

"நீ அம்மாட்ட ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஜெபா! நான் கதிரோட கூடப் போனதே அவளுக்குத் தெரிய வேண்டாம். காலையில அம்மா எழுந்திரிக்குறதுக்குள்ள நான் நம்ப வீட்டுக்கு வந்துருப்பேன். நீ போய் படு மோனே! குட்நைட்!" என்று ஜெபாவிடம் சொன்னதும் கதிர் அவனிடம் லேசாக தலையாட்டி விட்டு தன்னுடைய காரை அங்கிருந்து கிளப்பினான்.

அவனது வீட்டுக்கு ஆலெனை அழைத்து வந்தவன், தன்னுடைய வீட்டை முழுமையாக அவருக்கு சுற்றிக் காட்டினான். அவனது இந்த வீட்டினுடைய அமைப்பு  ஏறக்குறைய சுமலதா சென்னையில் வாங்கியிருந்த வீட்டைப் போலவே இருந்தது.
கீழே இரண்டு பெட்ரூம்களும், மாடியில் இரண்டு பெட்ரூம்களும் என அளவில் பெரியதாக இருந்த வீட்டில் வெளிப்புற சுற்றுசுவர் எடுக்கப்பட்ட பகுதியில் கதிருடைய ஒரு காரைத் தவிர இன்னும் ஐந்தாறு கார்கள் நிறுத்தும் அளவிற்கு நிறைய இடத்தை அப்படியே வெறும் இடமாக விட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

"ஏதாவது சூடா குடிக்கிறீங்களா ஸார்? மிளகு போட்டு மஞ்சள் பால் கொண்டு வரட்டுமா?" என்று கேட்ட கதிரிடம்,

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா! நீங்க இங்க வந்து உட்காரு!" என்று தான் அமர்ந்திருந்த லைட் க்ரே நிற எல் வடிவ ஸோஃபாவின் எதிரில் அவனை அமரும்படி கைகாட்டினார் ஆலென்.

கதிர் ஸோஃபாவில் கிடந்த ஒரு தலையணையை தன் மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்ததும் அவனிடம்,

"வீடு ரொம்ப நல்லாயிருக்கு கதிர்! டெகரேஷன், இண்ட்டீரியர் எல்லாமே சூப்பர்! அது சரி..... ஒரு ஆர்ட்டிஸ்டோட வீடு எப்டி இருக்கும்னு நினைச்சு உள்ள வர்றவங்கள கொஞ்சமாவது திருப்திப்படுத்தணும் இல்லையா?
ஆனா ஒண்ணு தான் புரியல ரேஷ்ங்குறது.... உன்னோட பேரா? முன்னால பெரிசா நேம்ப்ளேட் மாட்டி இருக்கு?" என்று கேட்டார்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now