❤ சிறுநகை 21

392 33 2
                                    

"நான் உள்ள வரலாமா ஸார்....?" என்று ஆலெனிடம் கேட்ட போதே அவளது ஒருகையை தனது கைக்குள் வைத்து அதை ஆலெனும், ஜெபாவும் பார்க்கும்படியாக அவர்களுக்கும் காட்டிக் கொண்டு அழுத்தமாகப் பற்றியிருந்தான் கதிர்.

காரிலிருந்து இறங்கும் போதே எச்சரிக்கையாக அவனை விட்டு விலகி ஓடப் போனவளை மதுரை மஹாலின் நெடுந்தூண் போல் வழிமறித்து அவள் கையைப் பற்றிக் கொண்டு அவள் கூடவே தான் அவனும் வீட்டுப் படியேறினான்.

"இன்று அவள் வீட்டிலிருந்து அவனது ஜாகைக்கு புறப்படும் வரையில் அவளது கையை விடும் உத்தேசமும் தூரிகை கொண்டு கித்தானில் ஜாலம் செய்யும் அந்த நிபுணனுக்கு இல்லவேயில்லை.

"வா கதிர்.... எப்பவும் வழக்கமா வர்ற நேரத்துக்கு சந்து வரலையின்னதும் நானும், சுமாவும் பயந்து போயிட்டோம். சந்து மோளோட சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிட்டு அங்க அவ இருக்காளான்னு பார்த்துட்டு வந்துடுறேன்னு ஜெபா கிளம்பும் போது தான் அவளோட மெசேஜ் வந்தது! அதுக்கப்புறம் தான் எங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியா இருந்தது!"

"நாளைக்கு காலையில நான் சந்துட்ட பேசிக்குறேன்னு சொல்லிட்டு சுமா போய் படுத்துட்டா! திடீர்னு நீங்க ரெண்டு பேரும் எதுக்குப்பா வெளிய போனீங்க? ஒண்ணும் பிரச்சனையில்லையே?" என்று ஆலென் அவனிடம் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒருவிதமான நக்கல் சிரிப்புடன் அவளைப் பார்த்து புருவம் தூக்கினான் கதிர்.

"என்னப்பா நீங்க? பிரச்சனை இருந்தா தான் கதிர்ணா சந்துவோட பேசணுமா என்ன? அவரோட பிஏவும் இங்க இல்ல; அவரோட அப்பா, அம்மாவும் சென்னையில இருக்காங்க. இந்த ஊர்லயே இப்ப கதிர்ணாவுக்கு ப்ரெண்ட்லியா பேச கிடைச்சவங்க நாம மட்டுந்தான்...... ஆனா நீங்க இவளக் கூட்டிட்டு எங்க போயிட்டிங்க கதிர்ணா? சாப்டீங்களா இல்லையா?" என்று வா என்ற வரவேற்பு கூட செய்யாமல் பதட்டமாக பேசிய ஜெபாவிடம் புன்னகை முகத்துடன்,

"எங்க போவோம் சேகர்? ரெண்டு பேருமா என் வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சோம்.
அதுக்குள்ள உங்க அக்கா தான் எனக்கு ஒரு ட்ரீட் தர்றேன்னு சொன்னா! அதான் அவளோட வொர்க் முடிஞ்சவுடனே ஸ்நாக்ஸ் சாப்ட போயிட்டு, கொஞ்ச நேரம் பீச்ல போயி காத்து வாங்கிட்டு, லேட் ஆகிடுச்சேன்னு நினைச்சு இங்க வந்தோம். இன்னும் நாங்க நைட் சாப்பாடு சாப்டலப்பா! ஆங்.... மறந்தே போச்சு பாரேன்!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now