இருண்ட மேகம் 2

0 0 0
                                    

     சுற்றியும் ஆரவாரம், மக்கள் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தனர்.  எனக்கு நேர் எதிரே இரண்டு பெண்கள் அழுதுகொண்டிருந்தனர்.  அங்கு என்னதான் நடந்தது என்று புரிந்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில், என் அம்மா என்னை அழைக்கும் குரல் கேட்டது.  திரும்பி பார்தேன்.  அம்மா, என்  பின்னே கொஞ்சம்  தூரத்தில் வந்து கொண்டிருந்தார்.  என் அருகில் வந்து என்னை அணைத்து தூக்கிக் கொண்டார்.  ஆம், தூக்கிக்கொண்டு தான். என் அம்மா சென்று கொண்டிருக்கும்போதே தூரத்தில் இருந்து 'உயின் உயின்' என்ற சத்தத்துடன் சிவப்பு கலர் லைட் சுற்றிக் கொண்டே ஒரு வெள்ளை நிற வண்டி வேகமாக வந்தது.  என் அம்மா என்னை வேகமாக அழைத்து சொல்லும்போது நான் அதுவரை நின்று கொண்டிருந்த இடத்தை திரும்பத் திரும்ப பார்த்தேன்.  நான் நின்ற இடத்தை மட்டும் இல்லை அதற்கு சற்று அடி தள்ளி நடந்திருந்த சம்பவத்தையும் தான்!  ஒரு சில மணி நேரத்திற்கு முன்னாடி நடந்தவைகள் என் மனதிற்குள் வந்து சென்றது.
      அண்ணா! அண்ணா! என்னை இப்படி ஒரு போட்டோ எடுங்க, இருங்க நான் பைக்குக்கு மேல எறிகிறேன்.  ஹான்,  இப்ப போட்டோ எடுங்க! என்று அந்த அண்ணனிடம் கூறினேன்.  அந்த அண்ணன் பெயர் சூர்யா. அவர் மாதம் ஒருமுறை அங்கு இருந்த அவரின் கூரை வீட்டுக்கு வருவார்.  வரும்போது கையில் இரண்டு பெரிய  கட்டப்பை வைத்திருப்பார்.  எனக்கு தெரிந்து கொஞ்சம் வளர்ந்து பசங்களில் என்னிடம் பேசும் ஒரே நபர் அவர்தான்.  நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பல வீடுகள் இருந்தாலும் அங்கு இருந்த ஒரே கூரை வீடு அதுதான்.  ஆனால், அந்த வீட்டை பார்க்கும் போது எனக்கு ஆசையாக இருக்கும்.  அப்போது டேய், எரும! உன்னை உன் அம்மா கூப்பிடராங்க சீக்கிரம் போடா, என்று பின்னால் இருந்து அருளின் குரல் கேட்டது. அருள்,  எங்கள் குடும்பம் இருக்கும் கட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த தூணுக்கு அருகில் உள்ள கட்டிலில் தான் அவனும் அவன் குடும்பமும் இருந்தது.  ஆம் கட்டில் தான்.  நாங்கள் அதை அப்படித்தான் கட்டில் என கூப்பிடவும்.  நான் அங்கிருந்து கிளம்பி சென்று கொண்டிருக்கும்போது ஒருமுறை திரும்பி பார்த்தேன். அருள் அந்த அண்ணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.  ஒருவேளை அவனும் போட்டோ எடுக்க அவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் போல!  எங்கள் கட்டிலை நோக்கி நடந்து செல்லும் போதே வெயில் மறைந்து நிழல் வந்தது.  மேலே எட்டிப் பார்க்கும்போது அந்த பெரிய அழுக்கான ஆனால் எனக்கு மட்டும் அழகாக தெரிந்த மேம்பாலம் அதற்கு மேலே பார்க்கும் போது வானத்தில் இருந்த மேகங்கள் சற்று இருட்டியிருந்தது.  மேம்பாலத்திற்கு கீழே தூணுக்கு அருகில் இருந்த கட்டில் மேல் அட்டைகளும் படுதாவாலும் அடுக்கி வைத்திருந்த இடத்தில் என் அம்மா உட்கார்ந்து கொண்டிருந்தாள். ஆம் அதுதான் நாங்கள் தங்கி இருக்கும் இடம்.  அந்த மேம்பாலத்தின் அடியில் தான்.  ஆனால், அதை வீடு என்று சொல்ல முடியாது.

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 30, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

இருண்ட மேகம்Where stories live. Discover now