இருண்ட மேகம்

6 2 0
                                    

கார்கால மேகமே...

கைகளை  ரெயின் கோட்டின் பாக்கெட்டுக்குள் விட்டு என் போனை வெளியே எடுத்தேன்.  போனை ஆன் செய்து மணியை பார்த்தேன் மணி காலை 5:30 என்று இருந்தது.  ரெயின் கோட் என்று நான் கூறியவுடன் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் அப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கும் என்று ஆனால் சாதாரண மழை அல்ல கனமழை பெய்து கொண்டிருந்தது. புயல் எச்சரிக்கையும் விடுக்க போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் ஆனால் இன்னும் எந்த செய்தியும் அறிவிக்கப்படவில்லை...  சரி அது இருக்கட்டும் முதலில் நான் யார் என்று கூறி விடுகிறேன் என் பெயர் யோகி, கல்லூரியில் மூன்றாம் படிப்பு பயில்கிறேன். இந்த அதிகாலையில் ரெயின் கோட்டுடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன? ஏனெனில் எனக்கு அதே அதிகாலை 6:30 மணிக்கு ப்ராக்டிகல் தேர்வு நடக்கவிருக்கிறது.  இது எனக்கு புதிதல்ல எனக்கு பொதுவாக வகுப்பும் காலை 6:30 மணிக்குத்தான் ஆரம்பிக்கும். ஆனால் அன்று அதிகாலை எப்பொழுதும் போல் இல்லை.  மழையையும் தாண்டி சுத்தி கும்மிரட்டு...  ஆனால் என் நல்ல நேரம் வீட்டில் கரண்ட் போகவில்லை.  காலை நாலரை மணிக்கு எழுந்து ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது காத்திருந்த பின் குளித்துவிட்டு  டிரெஸ்ஸை அணிந்து கொண்டு கிளம்பி விட்டேன். காலை எழும்போதே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்து பயந்தேன். எப்படியும் மழை இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் நின்று விடும் என்று நம்பினேன். ஆனால், அப்படி நிற்கவில்லை... என் நிலைமை! இப்போது கிளம்பி, எனது ஐடி கார்டு, ரெக்கார்ட் நோட் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தனியாக எனது வீட்டு வாசலில் நின்று எப்படி கல்லூரிக்கு செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆம் தனியாகத்தான்...  நான் எப்பொழுதும் காலை எழுந்து கல்லூரிக்கு என் வீட்டிலிருந்து செல்லும்போது என் அம்மா அப்பா யாரையும் எழுப்ப மாட்டேன் நானே எழுந்து ரெடியாகி சென்று விடுவேன். இப்போதும் அவர்களை எழுப்பவில்லை. நீங்கள் யோசிக்கலாம் இவன் கல்லூரிக்கு போகிறேன், போகிறேன் என்கிறானே எதில் செல்வான்? என்று...  என் வீட்டிலிருந்து கல்லூரிக்கு 15 கிலோமீட்டர்.  வெறுங்காலில் நடந்து செல்ல எல்லாம் வாய்ப்பே இல்லை.  அந்த அதிகாலை நேரத்தில் பேருந்தில் செல்லவும் எந்த வாய்ப்பும் கிடையாது! பைக் வாங்கித் தரும் அளவிற்கு எங்கள் வீட்டில் நான் ஏதும் சாதிக்கவும் இல்லை இல்லை. என்னிடம் இருந்தது ஒரு பழைய ஆக்டிவா ஸ்கூட்டி... என்னுடையதல்ல என் அம்மா உடையது...   சரி இப்படி பார்த்துக் கொண்டே இருந்தால் எந்த பயனும் இல்லை நேரம் தான் செல்கிறது என்று எனது செல்போனையும் ரெக்கார்ட் நோட்டையும் எடுத்து வண்டியின் டிக்கியில் போட்டேன். காருக்கு தான் அதை டிக்கி என்பார்கள் ஸ்கூட்டிக்கு என்ன என்று சொல்ல தெரியவில்லை டிக்கி என்றே வைத்துக் கொள்வோம். ரெயின் கோட்டை  சரியாக அணிந்து கொண்டேன்.  வண்டியை எடுத்தேன்.
   
     தூரத்திலிருந்து ஒரே ஒரு தெரு மின்விளக்கு மட்டும் எனக்கு தெரிந்தது அதுவும் வர வர எனக்கு ஒரு விதமாக தெரிந்தது அது எப்படி விளக்குவது? பத்தாவதில் பயாலஜி படுத்திருப்போம் அல்லவா! அதில்மூளையில் நியூரான் என்கிற ஒரு முக்கிய அணு உள்ளது என்று கூறுவர் அதன் வடிவமைப்பை போலவே வெளிச்சம் உள்ள பகுதி அனைத்தும் எனக்கு கண்களுக்கு தெரிந்தன. என்னடா இவன் உளறுகிறான் என்று நினைக்காதீர்கள். கண் கண்ணாடி போடுபவர்களுக்கு மட்டுமே இது புரியும். கண் கண்ணாடியை போட்டுக்கொண்டு மழையில் சென்று நிற்கும் போது எப்படி இருக்கும் என்று உங்கள் யாருக்காவது தெரிய வேண்டுமெனில் இப்பொழுதே கூறுகிறேன் நான் முன்பு கூறியது போலவே இருக்கும். நான் ஏன் கண் கண்ணாடியை அணிந்திருக்கிறேன்? எனக்கு தூரப்பார்வை... தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் எனக்கு சரியாக புரியாது. ஒரு ஐந்து வருடமாக நான் கண் கண்ணாடி அணிகிறேன். கண் கண்ணாடி இல்லாமல் எப்பொழுதும் இருந்தது கிடையாது, குளிக்கும் நேரத்தை தவிர...   ஏற்கனவே இருந்த இருட்டில் இப்போது இந்த பிரச்சனை வேறு. இருப்பினும் நான் தேர்வுக்கு சென்றாக வேண்டும். இல்லையென்றால் அரியர் தான்.  வண்டியை எடுத்து கிளம்பினேன். போகும் வழியில் ஒரு ஈ, காக்காவை கூட  பார்க்க முடியவில்லை.  எப்போதும் மழையில் நனைவது, மழையில் வண்டி ஓட்டுவது எனக்கு பிடிக்கும் என்றாலும் இப்பொழுது ஒரு பய உணர்வு அடிவயிற்றில் இருந்து கொண்டே இருந்தது. ரெயின் கோட் அணிந்திருந்தாலும் சட்டையிலும் பேண்டிலும் மழைநீர் படத்தானே செய்யும் அங்கு தேர்வுக்கு சென்று எப்படி சமாளிப்பது என்றும்,  வண்டி வழுக்கி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்றும் 1008 வருத்தங்கள் என் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தாலும் எனது பார்வை ரோட்டின் மீது மட்டுமே இருந்தது. நல்ல வேளை மறக்காமல் ஹெல்மெட் அணிந்திருந்தேன் எங்காவது வழுக்கி விழுந்தாலும் தலைக்கு எந்த சேதாரமும் இல்லை...  ஹெல்மெட்டின் மீது வேகமாக மழை நீர் விழுவது என் தலைக்கு மேல் யாரோ மத்தளம் வாசிப்பது போல் இருந்தது. அந்த ரணகளத்திலும் அது ஒரு கிளுகிளுப்பாகவே இருந்தது. வாயில் ஒரு பழைய பாட்டை முனங்கிக் கொண்டே வண்டியை ஓட்டும் போது திடீரென்று என் காதுகள் அடைக்கும் அளவிற்கு இடி இடிக்கும் சத்தம். ஒரு வினாடி நடுங்கிய விட்டேன். அப்பொழுதுதான் வண்டியின் பெட்ரோல் அளவைக் குறிக்கும் மீட்டரை பார்த்தேன். அம்புக்குறி சிவப்பை  காட்டியது! சிவப்பு என்றால் அனைவருக்கும் புரியும் வண்டியில் சிறிதளவு பெட்ரோலே உள்ளது என்று! கல்லூரிக்கு செல்லும் வரையிலாவது வண்டி நிற்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே வண்டியை ஓட்டினேன்.  ச்சே! இந்த காலை எவ்வளவு கொடுமையான காலையாக உள்ளது! காலை ஆறரை மணிக்கு தேர்வு, அதற்கு முன் கனமழை, வண்டியில் பெட்ரோலியில்லை, இதில் நியூரான்(கண்கண்ணாடி)  பிரச்சனை வேறு. ஹஹ்! என்னதான் இருந்தாலும் தேர்வுக்கு சென்று தானே ஆக வேண்டும்.  வண்டியை ஓட்டிக்கொண்டே பாதி தூரத்தை கடந்தேன். பாதி தூரம் வரை சாதாரண ரோடு தான், பெரிதாக எந்த வாகனமும் காலை நேரத்தில் வராது. அதற்கு மேல் வந்தது பைபாஸ் ரோடு!

இருண்ட மேகம்Where stories live. Discover now