❤ சிறுநகை 20

453 28 3
                                    

நாகர்கோவில் நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள சங்குதுறை பீச்சில் கதிர் தன்னுடைய காரை நிறுத்தியிருந்தான்.

இப்போது தான் இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்வது அவனுடைய மனதிற்கு சரியான காரியமாகப் படவில்லை. அதனால் தான் அவளுடன் இங்கு வந்திருந்தான்.

"டேய்.... இங்க எதுக்குடா வந்த? எட்டு மணிக்குள்ளயாவது வீட்டுக்கு போயிடுவோம்னு நான் நினைச்சுட்டு இருந்தா, சொகுசா ட்ரைவர் சீட்ல ஒக்காந்துக்கிட்டு நாகர்கோவில ரவுண்ட் வந்துட்டு இருக்கியா நீயி.....?"

"மரியாதையா அஞ்சு நிமிஷத்துல இங்கருந்து எங்க வீட்டுக்கு வண்டிய கெளப்புற! இல்ல நான் ஜெபாவ இங்க வரச்சொல்லி அவன் கூட பைக்ல போயிடுவேன் பாத்துக்க!" என்று சொன்னவளை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து லேசாக புன்னகைத்தவன்,

"ஓ.... நீ உந்தம்பி கூட பைக்ல ஏறி போனாலும் நீ என்ன கடல் தாண்டி வேற கண்டத்துக்கா போய்டுவ? இல்லல்ல.... நேரா உன் வீட்டுக்குத்தான போவ? அங்க வர்றதுக்கு எனக்கு பாதை தெரியாதா? இல்ல நீங்க உங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள என்னால அங்க போயி நிக்க முடியாதா?"

"ஒண்ணு சொல்லட்டுமா......? நீ போணும், போணும்னு எத்தன தடவ சொல்றியோ அத்தன தடவைக்கும் பத்து பத்து நிமிஷமா லேட் ஆக்கி நான் நினைக்குற நேரத்துல தான் உன்னைய நான் உங்க வீட்ல கொண்டு போய் விடுவேன்! அதுனால ரெண்டு நிமிஷத்துக்கு ஒருக்க வீட்டுக்குப் போகணும்னு அனத்தாம இரு புரியுதா?" என்று சொன்னவன் தன்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி, அவள் புறமாக வந்து வண்டியில் இருந்து இறங்குவதற்காக அவளுக்கு கதவைத் திறந்து விட்டான்.

வாழ்க்கைத் துணையாக அவளை மாற்றி இப்படி வாழ்வு முழுதுக்கும் அவளுக்கு சேவகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது அவனுக்கு.

"என்னைய திட்டிக்கிட்டே கார்ல முட்டிக்காத.... பாத்து எறங்கி வா!" என்று சொன்னவன் அவளுடைய தலைப்பகுதிக்கு மேல் காரில் கை வைத்துக் கொண்டான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now