❤ சிறுநகை 19

418 32 3
                                    

பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்து உடனே செய்ய வேண்டிய முக்கியமான வேலையாக
அன்று மாலை ஆறரை மணியளவில் சந்தனா வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டின் வெளியே வந்து நின்று அவளை வேறு எதுவும் பேச விடாமல் தன்னுடன் அழைத்து வந்தவன் தான்!

முன்னாளில் பள்ளி நேரம் முடிந்து அவள் வீடு திரும்பும் போதோ அல்லது வீட்டில் அவளறையில் சாயங்கால நேரம் இலகுவாக தொலைக்காட்சியின் முன் அமர்ந்து இருக்கும்போதோ அவளுடைய நொறுக்குத்தீனி மற்றும் மில்க் ஷேக்கிற்கு எந்தவிதமான இடையூறும் வந்து விடாமல் கவனிப்பது போல் இன்றும் அவளது பணிநேரம் முடிந்ததும் அவளை
நாகர்கோவிலில் அவனுடைய ஒரு விருப்பமான உணவகத்திற்கு
அழைத்துச் சென்று மாலை நேர சிற்றுண்டியையும், ஒரு பெரிய ஜுஸ் டம்ளரில் ஆப்பிள் மில்க் ஷேக்கையும் அவளுக்காக வாங்கித் தந்திருந்தான் கதிர்.

அவன் வாங்கித் தந்த அவளுக்குப் பிடித்தமான மாலை சிற்றுண்டியை பார்த்த சந்தனாவுக்கு இவன் என்ன என்னை கேட்காமல் இதையெல்லாம் எனக்காக ஆர்டர் செய்வது என்ற எரிச்சல் வந்தது.

அவளது எரிச்சலுடன் பசியும் சேர்ந்து அவன் அவளுக்காக ஆர்டர் செய்த உணவை சாப்பிட தூண்டியதால் அவன் மேல் இன்னுங்கொஞ்சம் எரிச்சலடைந்தாள்.

"எதுக்காக இப்ப என்னை இங்க கூட்டிட்டு வந்த? ஐயா சாமி கொறிக்க கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக்குடுன்னு உங்கிட்ட கேட்டனா நானு? என்னை பாக்கக்கூடாதுன்னு நான் உனக்கு ஆர்டர் போட்டா..... மானஸ்தனா இருந்தா, நீ என்னை பாத்துருக்கக் கூடாது! அத விட்டுட்டு என்னை வீட்டுக்கு போக விடாம இங்க கூட்டிட்டு வந்து குழிப்பணியாரமும், தேங்காய்பால் முறுக்கும்..... ஆப்பிள் ஷேக்கும்! இதெல்லாம் ஏன்?" என்று கேட்டவளின் எதிரில் அமர்ந்து உதட்டில் விரலை வைத்து பேசாதே என சைகை செய்தவன்,

"பசி கண்ணுல தெரியுது..... சீக்கிரத்துல எல்லாத்தையும் சாப்ட்டு முடி; அப்பத்தான் கியா, கியான்னு கத்தாம இருப்ப!" என்று அவளிடம் திமிராக சொல்ல,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now