முடிவுரை

362 54 30
                                    

நீயும் நானும் -24

முல்லை : தன் வயிற்றில் கை வைத்தவள் அப்போ இந்த குழந்தை எனக்கு வேணாம்😢

கதிர் : முல்ல.. என்ன பேசுற

வெற்றி : முல்லை என்ன வார்த்தை பேசுற...

முல்லை : ஆதவன் என்னோட பையன் இல்லைன்னு உனக்கு தோணும்போது எனக்கு இன்னொரு குழந்தை தேவையில்லை

கதிர் : முல்ல

வெற்றி : முல்ல... வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு என்ன வார்த்தை பேசுற😠

முல்லை : உனக்கு பயத்தை ஏற்படுத்துறது இந்த குழந்தை தானே வெற்றி😢

வெற்றி : எனக்கு சாப்பாடு ஊட்டி விட யாருமே இல்லன்னு ஆதவன் சொல்லும்போது நான் ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்...

அதுக்காக உன் குழந்தையை அழிக்கிற அளவுக்கு நான் கெட்டவன் கிடையாது முல்ல....

கதிர் : வெற்றி நாங்க எல்லாருமே ஆதவன இந்த வீட்டு குழந்தையா தான் பார்க்கிறோம்.. குறிப்பா முல்லையும் நானும் அவன எங்களோட மூத்த பிள்ளைய தான் பார்க்கிறோம்..

முல்லை : வெற்றி என்னைக்குமே ஆதவனை என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு மட்டும் நீ நினைக்காதே.. அப்படி நீ நெனச்சேன்னா அதுக்கு எது காரணமா இருக்கோ அத நான் அழிக்க தயங்க மாட்டேன்..

வெற்றி : போதும் நிறுத்தும் முல்ல..

கதிர் : டேய்.. இந்த வீட்டில ஆதவன் யாருங்கிறத நான் உனக்கு இப்ப புரிய வைக்கிறேன் டா..

கதிர் : அம்மா... அம்மா..

லெட்சுமி : ஏன்டா இப்படி கத்துற..

கதிர் : ஒன்னும் இல்ல இங்க வாம்மா

லெட்சுமி : உன் பொண்டாட்டி புள்ள உண்டானதும் போதும் நீ படுத்துற பாடு தாங்க முடியலடா

கதிர் : அம்மா முல்லைக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா..

லெட்சுமி : எந்த குழந்தையா இருந்தா என்னடா நல்லபடியா ஆரோக்கியமா பிறந்தா மட்டும் போதும்...

நீயும் நானும்Where stories live. Discover now