நட்புக்காக

583 93 69
                                    

நீயும் நானும் - 16

அப்பா.....







அப்பாபாபா....








ஆதவன்: அப்பா அம்மா முகத்தையே எவ்வளவு நேரம் பாப்ப சீக்கிரம் மோதிரம் போடுப்பா கேக் வெட்டனும்....

ஆதவனின் பேச்சை கேட்டு அனைவரும் சிரிக்க....

கதிர் எதுவும் பேசாமல் முல்லையின் விரல்களில் மோதிரத்தை அணிவித்தான்.

முல்லையின் காதல்....
அவளது பல நாள் கனவு....
பல நாள் ஏக்கம்....
தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணியவன்...
இன்று அவளுக்கு மட்டும் என உறுதி செய்யும் நிகழ்வு....

மகிழ்ச்சியின் உச்சத்தில் முல்லை....
இருந்தும் ஒரு சிறு வருத்தம் அவள் மனதை வருடியது....

கதிருக்கு இருக்கும் கோபமும்...
அவனிடம் இல்லாமல் போன புன்னகையும் அவளை ஏதோ செய்ததது....

முல்லை மனதில்: கதிர் நீ எனக்கானவன்... என்னவன்.... உன்னை புரிந்து கொள்ளாதது என் தவறு... அந்த தவறை சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு.... உன்னோடு வாழும் வாழ்க்கைக்காக காத்திருக்கும் உன் முல்லையின் தவிப்பை எப்போது புரிந்து கொள்வாய்.....

ஆதவன்: அம்மா

சுயநினைவிற்கு வந்தாள் முல்லை.

ஆதவன்: அப்பா மாதிரி நீங்களும் வேடிக்கை பாக்காம மோதிரத்தை போடுங்கம்மா...

முல்லை மோதிரத்தை போட போக...

கதிர் தன் கையை நீட்டாமல் இருக்க...

முல்லை: ஆதவா.. நா மோதிரம் போடனும்னா.. உங்க அப்பா கைய காட்டனும்டா...

ஆதவன் சட்டென கதிரின் கையை எடுத்து நீட்ட..

ஆதவன்: அப்பா கைய காமிப்பா...

முல்லை மோதிரத்தை அணுவிக்க...

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது.

அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது..

கதிர் முல்லை ஆதவன் மூவரும் கேக் வெட்ட ...

நீயும் நானும்Tempat cerita menjadi hidup. Temukan sekarang