காதலும் காமமும்

442 76 53
                                    

நீயும் நானும் - 21

காலைப் பொழுது இனிதே புலர்ந்தது...

முதலில் கண்விழித்த முல்லையின் கண் முன்.....

முழு மனநிறைவோடு... முகத்தில் சிறிய புன்னகையோடு... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கதிர்...

தான் கல்லூரி காலத்தில் பார்த்த அதே சிரித்த முகம்.... நெடு நாட்களுக்கு பிறகு இன்று... மீண்டும் தன் கண்முன்னே இருப்பதை கண்டு தானாய் புன்னகைத்தால் முல்லை...

குளியலறை சென்ற முல்லை குளித்து முடித்து விட்டு வெளியே வர கட்டிலில் அமர்ந்திருந்த கதிர் தனது கைகளால் கண்களை தேய்த்துக் கொண்டிருக்க...

அவன் கண் முன்னே கூந்தல் நுனியில் மழை நீரைப் போல சொட்டும் நீரோடு....

அவனருகே வந்து நிற்கிறாள் முல்லை..

காலை வேளையிலே மனமோ தடம்புரள... தன்னவளை நெருங்கினான்....

முல்லை : அழுக்கு பையா.....

கதிர் அவள் கழுத்தில் தன் முகத்தை பதிக்க தயாரானான்..

முல்லை : குளிக்காம என் பக்கத்துல வராத என்று அவனை லேசாக தள்ளி விட்டாள்...

கதிர் : முல்ல...

முல்லை : Nooo.. என அவனை குளியலறையின் உள் தள்ளிவிட்டாள்..

கதிர் வருவதற்குள் முல்லை வெளியே செல்வதற்கு அழகாக தயாராகி அமர்ந்திருந்தாள்...

குளித்து முடித்து வெளியே வந்த கதிருக்கு.... எங்க போறதுக்கு இப்ப இவ ரெடியாகி இருக்கா என கேள்வி எழும்பியது...

முல்லை : என்ன வேடிக்கை பார்க்கிற... சீக்கிரம் கிளம்பு.. டெல்லியை சுத்தி பார்க்க வேண்டாமா...

கதிர் : ரூமுக்குள்ளையே நான் சுத்தி பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு.... ம்ம்ம்...  இதுல எங்க டெல்லியை சுத்தி பாக்குறது...

முல்லை : ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா... இல்லைனா உன்னை விட்டுட்டு நான் பாட்டுக்கு கிளம்பி போய்டுவேன்..

கதிர் : அடிபாவி... தனியா போக தான் உனக்கு பயமா இருக்குமே... அதுவும் இது முன்ன பின்ன தெரியாத ஊரு...

நீயும் நானும்Where stories live. Discover now