❤ சிறுநகை 17

437 30 2
                                    

மாலை ஏழு மணியளவில் சஞ்சீவின் வீட்டிற்குள் இருந்த நடைபாதையில் கதிரும், வினோதினியும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். காலையில் சாப்பிட்டு முடித்தவனை சஞ்சீவ் தனது அன்னையிடம் அழைத்துச் செல்ல அவர் தன் மகனிடமும், கதிரிடமும் ஏதோ முக்கியமான மீட்டிங் வந்து விட்டதாக சொல்லி, அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

வினோதினி கிளம்பிய சற்று நேரத்தில் சஞ்சீவும், கதிரும் காரில் ஏறி பொள்ளாச்சியை ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பினர்.
இவனை இனிமேல் தன்னுடன் இருக்கச் சொல்ல முடியாதே என்று கதிருக்குத் தான் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருந்தது. சஞ்சீவிடம் அப்படிப்பட்ட சலனமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.

ஆறரை மணியளவில் வீட்டிற்கு வந்த வினோதினி சற்று ஃப்ரெஷ் அப் ஆகி விட்டு கதிரை தன் வாக்கிங்கில் கலந்து கொள்ள வருகிறானா என்று கூப்பிட்டார். அவனுடனே கிளம்பி வந்த சஞ்சீவிடம்,

"நான் மிஸ்டர் ரேஷ் கிட்ட பெர்சனலா பேசணும் சஞ்சீவ்!" என்று சொல்லி விட்டார்.

சின்ன சுருக்கம் ஒன்று கூட இல்லாத அவர்களுடைய காட்டன் சுடிதார், கழுத்தில் இருந்து ஒரு அடி கீழே இருந்த அவர்களது போனிடைல், காலில் அணிந்திருந்த மிதமான உயர ஹீல், இடக்கையில் வைத்திருந்த லேட்டஸ்ட் வகை மொபைல் என சஞ்சீவின் அம்மா வினோதினி தன்னுடைய வாக்கிங் நேரத்திலும் ஒரு ஹைஃபையான அம்மா எப்படி இருப்பார்கள் என்பதை கதிருக்கு நேரில் காட்டினார்.

இந்த வீட்டிற்கு வந்த போது கதிர் அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. காலையிலும் அவர்களுடைய அறையின் முன் இரண்டு நிமிடங்கள் தான் நின்றான். அதனால் இப்போது அவர்களைப் பார்த்து அவர்களுடைய தோற்றத்தில் சற்றே திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். இருபத்தாறு வயதான சஞ்சீவிற்கு அவனது அம்மா அவனது அக்கா மாதிரியான தோற்றத்தில் தான் இருந்தார்கள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now