❤ சிறுநகை 16

414 32 3
                                    

"ஹலோ; குட்மார்னிங் மிஸ்டர் ரேஷ்....! எழுந்திரிங்க ஸார்!
இப்டி டெரஸ்க்கு வந்து கொட்டுற பனியில வெறும் தரையில உடம்ப சுருட்டிக்கிட்டு படுத்துருக்கீங்க? வினோதினி பெரியம்மா, சஞ்சீவ் அண்ணால்லாம் நீங்க இங்க படுத்துருக்குறத பாத்தாங்கன்னா நெஞ்சுல கைய வச்சுருவாங்க!" என்று சொன்ன படி அவனுடைய முதுகில் லேசாக தட்டி உறங்கிக் கொண்டிருந்த கதிரை எழுப்பிக் கொண்டிருந்தாள் சஞ்சீவின் சித்தப்பா பெண் மினு.

ஒரு இளம்பெண் முதுகில் தட்டும் உணர்வு கூட இல்லாமல் தன்னுடைய காதுப்பகுதியை மட்டும் அவனுடைய கைக்குட்டையால் இறுக்கிக் கட்டிக் கொண்டு, அவன் கண்களை பெரிய கைகளால் மறைத்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அந்த நெடுமாறன்.

அதிகாலையில் அவளது அஸெஸ்மெண்ட் டெஸ்ட் ரிவிஷனுக்காக மாடிக்கு வந்த மினு கதிர் தரையில் சுருண்டு கிடப்பதைப் பார்த்து விட்டு, அவனை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவனை எவ்வளவு அசைத்தும் எழுப்ப முடியாமல் சடைத்துக் கொண்டவள், "யப்பா.... இவர் காலு ரெண்டும் நம்ம ஊர்ல இருந்து கோயம்புத்தூர் வரைக்கும் போகும் போலிருக்கே..... எவ்ளோ டயர்டா இருந்தாலும், கெஸ்டா வந்த வீட்ல ஒருத்தர் இப்டியா பேன்னு தூங்குறது? மைகாட்..... ஒருவேள இந்த ஆளு செத்து கித்துப் போய்ட்டாரா?" என்று யோசித்து திடீரென பயந்தவள் அவனது உடல் மூச்சு விடுவதால் மேலும் கீழுமாக ஏறி இறங்குகிறதா என்று கவனித்தாள்.

"அப்பாடா! உயிரோட தான் இருக்காரு; ஆனா எழுந்திருக்க தான் மாட்டேங்குறாரு. எனக்கென்ன..... நான் என்னால முடிஞ்ச வரைக்கும் இவர எழுப்ப ட்ரை பண்ணிட்டேன்பா! இனிமே இவரோட மல்லுக்கட்ட எனக்கு டைம் இல்ல; நான் படிக்கணும்!" என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அந்த மொட்டை மாடியில் அவளது ஃபேவரைட் ஸ்பாட்டுக்கு வந்தாள் மினு.

அந்த பெரிய வீட்டின் மொட்டை மாடியில் நடுநாயகமாக கீழே இருக்கும் பெரிய தொன்னந்தோப்பையும், ஒரு பக்கம் நீச்சல்குளம் மற்றும் மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, பேஸ்கெட் பால் கோர்ட் அடங்கிய பெரிய கார்டனையும், கார்டனுக்கு பக்கத்தில் சின்னதாக அமைந்திருந்த ஒரு கோவிலையும் பார்க்கும்படியாக நான்கு படிகள் ஏறி கொஞ்சம் கூடுதலான உயரத்தில் மண்டபம் போன்று ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now