❤ சிறுநகை 15

513 32 2
                                    

"சஞ்சீவ்..... நம்மள விட்டுட்டுப் போயிட்டாரேன்னு நினைச்சு நினைச்சு நீ வருத்தப்படுற அளவுக்கு உனக்கு நல்ல அப்பா அமைஞ்சதே நீ செஞ்ச புண்ணியம்னு தான்டா சொல்லுவேன்!"

"ஒரு சின்ன லெவல்ல ஆரம்பிச்ச பேக்டரி இப்ப
இந்தியாவுல நிறைய ஸ்டேட்டுக்கு சப்ளை பண்ற அளவுக்கு தேங்கா எண்ணெய் தயாரிச்சு தந்துட்டு இருக்குதுன்னா அது சாதாரணமான விஷயமா? உங்க ஒரு கம்பெனிய நம்பி மினிமம் ஆயிரம் குடும்பங்க இருப்பாங்கல்ல? அவ்ளோ பெரிய பிஸினஸ்ல வாங்குறது விக்குறது, லாபம் எடுக்குறது, சம்பளம் குடுக்குறதுன்னு எத்தன டென்ஷன் இருக்கும்?"

"அது அங்க உக்காந்து இருக்குறவங்களுக்கு தான்டா தெரியும்.....! நாம தான் நம்ம லெவலுக்கு பிரச்சனைகள பாக்குறோமே? இதுல நீ ஓடி ஓடி தொழிலப் பார்த்ததுனால தான் உங்கப்பா இறந்து போயிட்டாருன்னு சொன்னா அது என்ன ஏத்துக்குற மாதிரியா இருக்கு?"

"உங்க அப்பா இறந்தப்ப நீ உன் தாத்தாட்ட பேசுனது ரொம்ப பெரிய வார்த்த...... என்னையும் எனக்கான வாழ்க்கைய வாழ விடாம இப்டி படுக்க வச்சா தான் நீங்க சந்தோஷமா இருப்பீங்கல்லன்னு நீ அவர்ட்ட கேட்டதுக்கு அவர் உங்கிட்ட நான் இந்த வீட்ல இருக்குற வரைக்கும் நீ சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு சொன்னாரு பாரு! அந்த மனுஷன இத்தன வருஷத்துல ஒருதடவ கூடப் போயி பாக்கலயேடா நீ? தெரிஞ்சோ தெரியாமலோ உங்க கிட்ட தப்பா பேசிட்டேன்; என்னை மன்னிச்சிடுங்கன்னு நீ கேக்க நினைச்சாலும் அந்த காரியத்த இப்ப உன்னால செய்ய முடியுமா? அந்த மனுஷன் செத்துட்டாருன்னு கேள்விப்பட்டப்ப கூட நீ ஒரு சொட்டு கண்ணீர் வுடலையே? இப்டி உன் சொந்தக் குடும்பத்துல இருந்தே ஒதுங்கி ஒதுங்கி நின்னு நீ என்னதான்டா செய்யப் போற?" என்று சஞ்சீவிடம் மிகு‌ந்த வருத்தத்துடன் கேட்டான் கதிர்.

தான் கேட்ட கேள்விக்கு சஞ்சீவிடம் இருந்து பதில் வராது என்று கதிருக்கு தெளிவாகத் தெரியும். இத்தனை வருடங்களில் அவன் கதிரிடம் மேலோட்டமாக என்றாலும் அவனது மனவருத்தத்தை சொன்னதே பெரிய விஷயம். அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் யாரிடமும் நெருங்காதவன் சஞ்சீவ்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now