❤ சிறுநகை 14

538 29 2
                                    

"இங்க வந்ததுல இருந்து ரொம்ப உளறிட்டே இருக்கீங்களே பாஸ்? உங்களோட ஆர்ட் வொர்க்ஸ் நல்ல மூவிங்ல இருக்கு. ஓகேதான்..... ஆனா ஒரு ஸ்டெப்லைஸ்டான இன்கம் எப்பவும் வரணும்னு தான நாம இத்தன பிஸினஸ செட் பண்ணுனோம்? அது எல்லாத்தையுமே என்ட்ட தூக்கி குடுத்துடுறேன்னு சொல்றீங்க? இப்டி ஸடனா யோசிச்சு பெரிய டெஸிஷன்ஸ்லாம் எடுக்காதீங்க பாஸ்..... ப்ளீஸ்!" என்று சொன்ன சஞ்சீவின் படுக்கையறை குழல் விளக்கின் வெளிச்சம் தன் கண்களைக் கூச வைக்கிறதென்று நினைத்து உச்சுக்கொட்டி விட்டு தன் கைக்குட்டையை எடுத்து முகத்தை வெளிச்சம் படாமல் மூடிவிட்டு கட்டிலில் கால் ஆட்டிக்கொண்டு மல்லாக்கப் படுத்திருந்தான் கதிர்.

"கண்ண மூடியாச்சு; கால ஆட்ட ஆரம்பிச்சாச்சு. ஆர்ட்டிஸ்ட் ரேஷ் அவர்களே....... அப்டியே ஏகாந்த உணர்வுக்கு போயிட்டிங்க போலிருக்கு.....!" என்று கேட்ட சஞ்சீவிடம் பதிலொன்றும் பேசாமல் சற்றே சப்தம் எழுப்பி சிரித்தான் பெரியவன்.

"சம்பந்தேயில்லாம இப்ப சிரிச்சா என்ன அர்த்தம்? ஏதாவது புதுசா இன்ஸ்பிரேஷன புடிச்சுட்டீங்களா என்ன?" என்று கேட்ட சஞ்சீவின் கேள்வியில் சூடாகி கைக்குட்டையை முகத்திலிருந்து சற்று விலக்கி விட்டு முறைத்தவன்,

"ஏன்டா.... எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம்னா அது வரையறது மட்டுந்தான்னு முடிவே பண்ணிட்டியா நீ? அதத்தாண்டியும் நிறைய விஷயம் இருக்குடா! நான் இன்னிக்கு அவ வீட்ல தான்டா நைட் சாப்பாடு சாப்டேன். சாம்பார், புடலங்கா கூட்டு, கேரட் பீன்ஸ் போட்டு பொரியல், மீன் வறுவல், நுங்கு பாயாசம் இத்தனை மெனு இருந்தது தெரியுமா? இதுல ஹைலைட் என்னன்னா அவ.... அதுதான்டா அந்த சூனியபொம்ம
ஆலென் ஸாருக்கு வெங்காயத்தல்லாம் வெட்டிக் குடுத்து உதவி செஞ்சாளாம்டா...."

"என்னால நம்பவே முடியல தெரியுமா சஞ்சீவ்..... அவ ஒவ்வொரு ஐயிட்டமா எடுத்து என் இலையில வைக்குறப்ப ஐயயோ இதுல கெரஸின கலந்துருப்பாளோ, அதுல சுண்ணாம்ப சேர்த்து வச்சு இருப்பாளோன்னு நினைச்சு மனசு படக்கு படக்குன்னு அடிச்சுக்குது. ஆனா கடைசி வரைக்கும் அவ சாப்பாட்ட சாப்ட்டு எனக்கு ஒண்ணுமே ஆகலடா! சாப்பாடும்  ரொம்ப டேஸ்டா இருந்த மாதிரி ஒரு திருப்தி..... நான் ஏகாந்தமா இருக்குறதுக்கு இதுக்கு மேல வேற ஏதாவது காரணம் வேணுமாடா? "

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now