லெட்சுமி : இல்லையா எங்க போயிட்டா

ஆதவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா அப்பா அம்மாவ ஊசி போட கூட்டிட்டு போய் இருக்காங்க..

லெட்சுமி : அய்யய்யோ முல்லைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே அவளை எங்க கதிர் கூட்டி போய் இருப்பான் தெரியலையே.. ஏங்க வாங்க நம்ம உடனே போவோம்..

பாண்டியன் : அவசரப்படாத இரு லட்சுமி கதிருக்கு முதல்ல கூப்பிட்டு என்னன்னு கேட்போம்..

பாண்டியன் கதிரின் அலைபேசிக்கு அழைக்க அவனோ அழைப்பை ஏற்கவில்லை...

லெட்சுமி : என்ன ஆச்சுன்னு தெரியல கதிர்வேற போனை எடுக்க மாட்றான்.. கடவுளே இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே.....

பாண்டியன் : அவன் வந்துருவான் நீ எதுக்கும் பயப்படாத முதல்ல பேரனை வாங்கு அவன் சாப்பிட்டானா என்னனு தெரியல..

லெட்சுமி : அத மறந்துடேன் பாருங்க..

லெட்சுமி : வாடா குட்டி பாட்டி சாப்பாடு ஊட்டி விடவா..

ஆதவன் : அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தாங்களா அப்பதான் அம்மா உடம்பு சரி இல்லாம போயிடுச்சு😢

பாண்டியன் : அம்மாக்கு ஒன்னும் ஆகாது நீ பயப்படாதே, நீ பாட்டி கூட உள்ள போ...

ஆதவன் : ம்ம்...

வெற்றி : மாமா ஆதவனை நான் வேணும்னா...

பாண்டியன் : அவனை நாங்க பார்த்துக்கிறோம் பா... கதிர் வரவரைக்கும் நீ வேணும்னா வெயிட் பண்ணு இல்ல உனக்கு அவசர வேலையா இருந்தா நீ கிளம்பு

வெற்றியும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்ப..

---------------------------------------

முல்லையை கதிர் மருத்துவமனையில் அனுமதித்த பின்...

மருத்துவர் முல்லையை பரிசோதனை செய்து கொண்டிருக்க...

கதிர் மிகவும் பதற்றத்துடன் வெளியே அமர்ந்திருக்க..

நர்ஸ் : சார் உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க..

கதிர் : ஆங்..

நீயும் நானும்Where stories live. Discover now