❤ சிறுநகை 12

482 32 2
                                    

நால்வருமாக இணைந்து அவரவருக்கு வேண்டியதை எடுத்துப் போட்டுக் கொண்டு, பேசிச் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். இவள் பக்கத்தில் உட்கார்ந்து கதிர் இவ்வளவு குதூகலமாக சாப்பிடுவது அவனுக்கு இதுவே முதல் முறை.

முன்பெல்லாம் சுமலதாவின் வீட்டில் பார்ட்டி என்றால் மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பதரை பத்து மணி வரையில் ஒட்டிய வயிறுடனே தான் வரும் கெஸ்ட்டுகளுக்கு சர்வீஸ் செய்து கொண்டிருப்பான் கதிர்.

பார்ட்டி முடிந்து பாகேஸ்வரி உட்பட ஏழெட்டு வேலைக்காரர்கள் உணவருந்தும் வேளையில் சரியாக அவர்கள் சாப்பிடும் இடத்தில் வந்து நின்று காக்கை வடையைக் கவ்வுவது போல அவள் இவனை துண்டாக கவ்விக் கொண்டு சென்று விடுவாள்.

"நீங்க எல்லாரும் இங்க நல்லா சாப்புடுங்க; நானும் சேகரும் கதிர்க்கு ஸ்பெஷல் டிஷ் எல்லாம் தனியா எங்க வீட்டு கிச்சன்ல எடுத்து வச்சுருக்கோம். சிக்கன் வெரைட்டி, கேக், ஐஸ்க்ரீம் எல்லாம் உள்ள நிறைய இருக்கு.....!" என்று ஆசை ஒழுக பேசி அவனை அழைப்பவளிடம் எவருக்கு சந்தேகம் வரும்?

"லெஷ்மி பாப்பா கூடப் போயி நீ சாப்ட்டு வா தங்கம்! அது ஆசையா ஒன்னக் கூப்டுது பாரு!" என்று சொல்லி பாகேஸ்வரியும் சந்தோஷமாக அவனை அவளுடன் அனுப்பி வைப்பார். இருக்கும் மிச்ச உணவை சாப்பிடாமல் எஜமானி வீட்டு உணவை மகன் வயிறார சாப்பிடட்டும் என்ற நினைப்பு அந்த பெண்மணிக்கு! கதிரும் தன் தாயின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் பேசாமல் அவரிடம் தலையாட்டி விட்டு அவளுடன் செல்வான்.

இவனைப் படுத்துவது இப்படி என்றால் பாகேஸ்வரியை சின்ன எஜமானி படுத்துவது சற்றே ஏ டைப் டார்ச்சர்! காலை ஆறு மணியில் இருந்து, இரவு பத்தரை மணி வரை தொட்டு தொட்டு ஏதாவது வேலை செய்து விட்டு
பதினொன்றரை மணியளவில் குறுக்கு வலியுடன் படுக்கையில் விழுபவரின் இடையைப் பற்றிக் கொண்டு அவருடைய குட்டி வீட்டில் வந்து படுத்துக் கொள்வாள் சந்தனா.

அரைமணி நேரம் அந்த மகாராணிக்கு கதிரின் அன்னை ஏதாவது கதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்! அதுவரையில் அவன் அந்த வீட்டினுள் செல்லாமல் அந்த சிறிய வீட்டின் வெளியே கொசுக்கடியில் அமர்ந்திருக்க வேண்டும்!
தங்கள் மொத்த வாழ்க்கையையும் சேர்த்து இப்படிப் படுத்துபவளைப் பார்த்து கோபத்தில் அடிக்கடி
"இது லச்சுமி இல்ல! என்னைப் புடிச்ச லங்கினி!" என்று நினைப்பான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now