❤ சிறுநகை 8

593 34 1
                                    

"இப்ப கூட நீ என்னை உங்க வீட்ல ஹால தாண்டி போக விட மாட்டல்ல? என் இடம் எதுன்னு ரொம்ப தெளிவா எனக்குப் புரிய வைக்குறடீ நீ!" என்று கேட்டவனிடம் சினந்த முகத்துடன்,

"ஆமா.... இப்ப நாங்க இருக்குற வீடு சிக்ஸ் பெட்ரூம் பங்களா பாரு; அதான் உன்னைய நான் ஹால தாண்டி பெட்ரூமுக்குள்ள போக விடல! போடா லூசு; லிஸன்.... ஆலென் உனக்கு எப்பவோ குடுத்த பணத்த நீ இப்ப எங்ககிட்ட திருப்பிக் குடுத்துருக்க; அவ்ளோ தான்; மத்த ஆளுங்க மாதிரி உங்களுக்கு தேவைப்படுற நேரத்துல நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்.....!"

"அதுனால உங்க அம்மாவோட எடத்துக்கு நீங்க வந்துடுங்க; இப்ப நீங்க நினைச்சா சினிமா இன்டஸ்ட்ரில ஒரு ட்ரீம் ஹீரோயினா ஒரு ரவுண்டு வரலாம்னு சொல்லி தோளுல கைபோட்டு டிமாண்ட் பண்ணுன நீயும் ஏதாவது டிமாண்ட் பண்ணிடாத! அப்டியே ஏதாவது கேக்குறதுனாலும் ஆலென் கிட்டதான் நீ கேக்கணும்!"

"நான், அம்மா, ஜெபா மூணு பேரும் உன்னோட கொடுக்கல் வாங்கல்ல சம்பந்தப்பட்டவங்க கிடையாது புரியுதா?" என்று கேட்டவளிடம் எதுவும் பேசாமல் இரண்டு நிமிடங்களுக்கு கைகளை இறுக்கமாக மடிக்கிய படி சுவரோரம் நின்று கொண்டிருந்தான் கதிர்.

"ஹே ரே..... ஐம்' ஸாரி கதிர்! நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்; இங்க பாரு மேன்!" என்று அவனை அழைத்தவளிடம் சினம் மறைக்கப்பட்ட இயல்பான குரலில்,

"எவன் அப்டி கேட்டு உன் தோளுல கையப் போட்டவன் லஷ்மி? இன்னும் இன்டஸ்ட்ரில இருக்குறவன் தானா? தெலுங்கு காரனா? தமிழ்க்காரனா? சரி சேகர் பேரத்தான் ஜெபான்னு மாத்திட்டீங்களா? உம் பேருல இருந்த லஷ்மிய கழட்டி தூக்கி எறிஞ்சுருக்கீங்க? அவன் பேருல புதுசா ஒண்ண சொருகியிருக்கீங்க; ஏன் இதெல்லாம்?" என்று விசாரித்தவனிடம்,

"என்னைய ஃபிலிம் இன்டஸ்ட்ரிக்குள்ள ஆக்டிங்க்காக கூப்ட ப்ரொட்யூசர் யாரு? எங்க ரெண்டு பேரோட பேரு எதுக்காக மாறியிருக்கு? இதெல்லாம் கேக்குறதுக்காக தான் இன்னிக்கு இங்க வந்தியா நீ? உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கிளம்பு!" என்று கண்டிப்பான குரலில் அவனிடம் சொன்னாள் சந்தனா.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now