❤ சிறுநகை 6

825 38 5
                                    

"இந்தப் பையன் என்னத்தப் பேசப் போறான்னு யாருக்குத் தெரியும் கண்ணு? இரு அவங்கிட்டயே கேப்போம்!" என்று கல்பனாவிடம் சொன்ன பாகேஸ்வரி தன்னுடைய மகனின் முகத்தைப் பார்த்து,

"சொல்லுய்யா கதிரு!" என்றார் ஒருவிதமான ஆவலுடன்.

"ம்மா..... நான்...... சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்! எனக்கு ஒரு பொண்ணு பாருங்க!" என்று சொன்னவனுடைய பேச்சு எதிரில் அமர்ந்திருந்த இருவரும் சற்றும் எதிர்பாராத பேச்சாக இருந்தது.

"நீ கல்யாணம் பண்றதுன்னா பண்ணிக்க கதிர்! அதுக்கு எதுக்கு அம்மா உனக்காக பொண்ணு பார்க்கணும்?" என்று அவனிடம் கேட்ட கல்பனாவிடம் சலித்த குரலில் உச்சுக்கொட்டிய கதிர் அவளிடம்,

"நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, எனக்காக அம்மா தானக்கா பொண்ணப் பாக்கணும்....? வேற யாரு பாப்பாங்க? நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அம்மா எங்கிட்ட பேசட்டும்!" என்று சொன்னவன் தன் அன்னையிடம்,

"என்னம்மா..... நான் சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என்று கேட்டான்.

"மவராசனா பண்ணிக்க சாமி! உன் கல்யாணத்துக்கு முகூர்த்தம் பாக்குறதுல இருந்து பொண்ணுக்கு பட்டு வாங்குறது வரைக்கும் நானும், கல்பனாவும் சேர்ந்து போயி செய்யுறோம்; ஆனா பொண்ண மட்டும் நீதான்யா பாத்துக்கணும்!" என்று சொன்னார் பாகேஸ்வரி.

"ஏன்.... அது ரொம்ப கஷ்டமான வேலையின்னு நினைச்சு அத செய்ய உங்களுக்கு இஷ்டமில்லையோம்மா? இல்ல நம்ம மகனுக்கு எல்லாம் எவன் பொண்ணு குடுப்பான்னு யோசிச்சீங்களா?" என்று கேட்டவனிடம்,

"உனக்கு ஏன்யா பொண்ணு கிடைக்காது? அதெல்லாம் ராணி கணக்கா ஒருத்தி வருவா பாரு! அம்மா அதுக்காக யோசிக்கல
கதிரு; நீ காலேஜ்ல படிக்குறப்பவே ஏதோ ஒரு பொண்ண ஆசப்பட்டன்னு எனக்குத் தெரியும். இருவத்தோரு வயசுலயே நீ ரொம்ப அழுத்தமான பையந்தான கண்ணு; பொறுப்பில்லாத அப்பன், வெவரந்தெரியாத அம்மான்னு ஒனக்கு கிடைச்ச நாங்க ரெண்டு பேரும் சரியில்லன்னா நீ என்னதாம் பண்ணுவ பாவம்...... ஆனா என்னதான் வெவரமில்லாதவளா இருந்தாலும் நீ யார் மேலயோ பிரியம் வச்சிருந்தது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது ராசா!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now