❤ சிறுநகை 5

1K 36 3
                                    

அன்று அதிகாலையில் கதிரும், சஞ்சீவும் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தனர். காலை ஐந்தரை மணி தான் ஆகியிருந்தது. அதற்குள் குளித்து, வீட்டு வாசலில்  கோலம் போட்டு, காலை நேர காஃபிக்கான பாலையும் கொதிக்க வைத்து தயார் செய்து விட்டார் பாகேஸ்வரி.

அவரது மகன் வந்ததும் அசதியாக இருக்கிறது என்று சொல்லி விட்டு தூங்குகிறானோ இல்லை ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்று சொல்லி சற்றே வாக்கிங் செய்து, குளித்து விட்டு வந்து காபி கேட்கிறானோ...... இரண்டில் எதைச் செய்வான் என்று தெரியவில்லை! அதனால் எதற்கும் தயாராக இருப்போம் என்று காலை காஃபிக்கான ஆயத்த வேலைகளுடன் மகனை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.

தெருமுனையில் ஒரு கார் மெல்ல வருவதைப் பார்த்து விட்டு, தன்னுடைய வீட்டின் உரிமையாளர்
கல்பனாவின் வாசல்புறமாக  சென்று கதவைத் திறந்து விட்டார் பாகேஸ்வரி.

போர்டிகோவில் காரை ஏற்றியவன் அன்னையிடம், "அதுக்குள்ள உங்கள யாரு தூக்கத்துல இருந்து எழுந்திரிக்க சொன்னா? இன்னும் ஆறு மணி கூட ஆகலையின்னு தான நான் உங்களுக்கு கூப்டாம வந்துட்டு இருக்கேன்? அதுக்குள்ள எழுந்திரிச்சு, வாசல தெளிச்சு, கேட்ட தெறந்து உட்டு..... என்ன ஆர்ப்பாட்டம் இதெல்லாம்; ஏம்மா இப்டி பண்றீங்க?" என்று தாயிடம் சலித்துக் கொண்டான்.

"அதுசரி; சூரியன் வீட்டுக்குள்ள வார வரைக்கும் பாய சுருட்டாம அம்மைய படுக்கையில கெடக்க சொல்றியாக்கும் நீயி? அதெல்லாம் நம்மளால முடியாது சாமி! சஞ்சீவு வாய்யா...... நல்லாயிருக்கியா தங்கம்? என்னய்யா போன தடவைக்கு இப்ப இன்னுங்கொஞ்சம் எளச்ச மாதிரி தெரியுற?" என்று மகனிடமும் பதில் பேசி விட்டு சஞ்சீவையும் நலம் விசாரித்தார் பாகேஸ்வரி.

"சும்மா பாத்தா நான் ஒல்லியா தெரிய மாட்டேன் ஆன்ட்டி; இப்ப என் பக்கத்துல ஒரு ஜைஜான்டிக் பிகர் நிக்குதுல்ல....? அதுனால கொஞ்சம் ஒல்லியா தான் தெரிவேன்!" என்று சொன்னவனை வாயைத் திறக்காமல் முறைத்தான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now