❤ சிறுநகை 4

951 41 4
                                    

"ஆலென்...... என்ன நீ? அம்மா என்ன செஞ்சாலும் அத ஒருவார்த்த கூட ஏன்னோ, எதுக்குன்னோ கேக்க மாட்டேங்குற! பத்தாயிரத்த குடுத்து இப்ப உம்பொண்டாட்டிய ஷாப்பிங் அனுப்பி வச்சுருக்க! பாரு அதுல ஒரு ரூபா கூட மிச்சமா திரும்பி வராது!"

"நான் என்ன பத்து லச்சமா கொண்டு போனேன்? ஆஃப்டர் ஆல் டென் தவுசண்ட் ரூப்பீஸ்...... அது ஜஸ்ட் இப்டி சொடுக்கு போடுறதுக்குள்ள செலவாகிடுச்சு ஆலென்னு உம்பொண்டாட்டி நம்ம கிட்ட வந்து சொல்லலையின்னா என்னைய என்னன்னு கேளு!"

"இந்த பத்தாயிரத்த அம்மா கையில குடுத்ததுக்கு பதிலா அத
பத்திரமா வச்சிருந்தன்னா அடுத்த மாசம் நம்ம மொபைல் பில்ஸையும், ஈபி பில்லையும் கட்டியிருக்கலாம்ல அப்பா? ஏம்ப்பா..... அம்மா ஷாப்பிங் கிளம்புனப்ப நீ ஏன் ஒருவார்த்த கூட வேண்டாம்னு சொல்லல ஆலென்?" என்று தன் தந்தையிடம் கேட்டு அவரைத் திட்டிக் கொண்டிருந்தான் ஜெபா.

தன்னுடைய மகனின் கேள்விக்கு ஆலென் பதில் சொல்ல வாயெடுத்த போது சந்தனா அவர்களுடைய உரையாடலில் குறுக்கே புகுந்து தந்தையிடம்,
"டாட்..... வெங்காயத்த கோல்டன் ப்ரவுனா வதக்க சொன்னியே? இந்த ப்ரவுன் போதுமா? இன்னும் கொஞ்சம் வதக்கணுமான்னு பாரேன்.....!" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இவ ஒருத்தி..... இங்க ஒருத்தன் சீரியஸா பேசிட்டு இருக்கும் போது வெங்காயத்த வந்து பாருன்னு கூப்ட்டுக்கிட்டு வெங்காயம்...... ஏன்டீ குழம்புல ஒரு கல்லு உப்பு கூடுனாலும் அத கரெக்டா கண்டுபிடிச்சு சொல்றல்ல....?"

"அப்ப இத்தன வருஷத்துல அந்த குழம்ப செய்யவும் தெரிஞ்சுருக்கணும்ல ஒனக்கு? ஆலென் பாவம்...... ஆஃபிஸ்லயும் வொர்க் பண்ணிட்டு வந்து, இங்கயும் எத்தன வேலைய பாக்குறாரு? கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் நீயே போய் குழம்ப செஞ்சு முடி போ!" என்று சொன்ன ஜெபாவிடம்,

"இருக்கட்டும் மோனே! சந்துக்கு இதெல்லாம் ரொம்ப தெரியாதுல்ல... விடு; சுமாவுக்கு குடுத்த பத்தாயிரம் நம்ம பட்ஜெட்ல இடிக்காம இருக்குறதயும், இப்ப இந்த நெத்திலி குழம்பு செமயா வர்றதையும் அப்பா ஒண்ணாவே கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி விட்டு அடுப்பருகில் சென்றவரை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தனா.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now